உலக தடகள சாம்பியன்ஷிப்
உலக தடகள சாம்பியன் ஷிப் இரு ஆண்டுக்கு ஒருமுறை 'உலக தடகள அமைப்பு சார்பில் 1983 முதல், நடத்தப்படுகிறது. இதன் 20வது சீசன் இன்று ஜப்பானின், டோக்கியோ தேசிய மைதானத்தில் துவங்குகிறது.
உலகின் 198 நாடுகளில் இருந்து 2202 வீரர், வீராங்கனைகள் காத்திருக்கின்றனர். 49 போட்டிகளில் 149 பதக்கம் வழங்கப்பட உள்ளன.இந்தியா சார்பில் இம்முறை 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் களமிறங்குகின்றனர்.
இதில் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரு பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா மீது நம்பிக்கை காணப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பின் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை, கடந்த 2021ல் டோக்கியோ மண்ணில்வென்று தந்தார்.
0
Leave a Reply