எலும்புகள் வலுப்பெற என்ன சாப்பிடலாம்?
எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், குறைபாடு காரணமாக எலும்புகளில் வரும் பிரச்சனைகளை முன்கூட்டியே தடுக்கவும் கால்சியம், வைட்டமின் சி மற்றும் டி, மக்னீசியம், புரதம், பாஸ்பரஸ், ஃபோலேட் ஆகிய சத்துகள் தேவை.
இவற்றில் மிக முக்கியமானவை கால்சியம், வைட்டமின் டி, மக்னீசியம் என்பதால் அவை அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
கசகசா, பச்சைநிறக் காய்கறிகள், கீரை வகைகள், புரொக்கோலி, எள், சியா விதைகள், பாதாம் போன்றவற்றை எடுத்துக்கொண்டால் கால்சியம் சத்து கிடைக்கும்.
சூரிய ஒளியில் இந்தச் சத்து அதிகம் உள்ளது. காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் உள்ள ஒளியில் வைட்டமின் டி அதிகம் இருக்கும்.
கீரை வகைகள், சூரியகாந்தி, பூசணி, எலுமிச்சை விதைகள், வால்நட், பாதாம், முந்திரி, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், கோதுமை, புழுங்கலரிசி, அவகேடோ போன்றவற்றில் மக்னீசியம் இருப்பதால், அவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
0
Leave a Reply