25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும்  மருத்துவமனைக்கு ஆய்வக நுட்புநர் நிலை 2 (Lab Technician Grade-II) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும்  மருத்துவமனைக்கு ஆய்வக நுட்புநர் நிலை 2 (Lab Technician Grade-II) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும்  மருத்துவமனைக்கு ஆய்வக நுட்புநர் நிலை 2 (Lab Technician Grade-II) பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் (Consolidate Pay) அடிப்படையில் மாதம் ரூ.15000/-ஊதியத்தில் மாவட்ட நலச் சங்கம் மூலம் நிரப்பப்பட உள்ளது. (Under District Health Society)

பணியின் பெயர்: 

ஆய்வக நுட்புநர் நிலை 2 (Lab Technician Grade-II)

மொத்த பணியிடங்கள்:     6

மாத ஊதியம்:    ரூ.15000/-

வயது வரம்பு:

குறைந்த பட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 59 (ஆண்டுகளில்)

கல்வித்தகுதி:

மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் பட்டய படிப்பு- DMLT (இரண்டு ஆண்டுகள்) KING INSTITUTE OF RESEARCH AND PREVENTIVE MEDICINE அல்லது   தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டது.

 விண்ணப்பங்கள் (முழுமையான முகவரியுடன்) மற்றும் சான்றிதழ்கள் நகல்கள் (கல்வி தகுதி/ சாதிச் சான்று/ஆதார் நகல்) தபால் மூலமாக அனுப்ப வேண்டிய இறுதி நாள்: 29.06.2026             பிற்பகல் 5.00 மணிவரை முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, எண்:1, பெருந்திட்ட வளாகம், மாவட்ட ஆட்சியரகம், கூரைக்குண்டு கிராமம், விருதுநகர்-626 002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News