25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


விருதுநகர் மாவட்டம் ஒரு கண்ணோட்டம் - ஒரு வரலாற்றுப் பயணம் (1800- 1950)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம் ஒரு கண்ணோட்டம் - ஒரு வரலாற்றுப் பயணம் (1800- 1950)

விருதுநகர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் (29.01.2025)  விருதுநகர் மாவட்டம் ஒரு கண்ணோட்டம் - ஒரு வரலாற்றுப் பயணம் (1800- 1950) GLIMPSES OF VIRUDHUNAGAR DISTRICT -A Historical Journey (1800 -1950)புத்தகத்தினைமாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள்  தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்திரு.தங்கம் தென்னரசு அவர்கள்வெளியிட்டார்.

நமக்கு எதிரே இருக்ககூடிய சவால்கள் குறித்த எதிர்காலம் இருக்கிறது. நாம் நீந்தக்கூடிய நிகழ்காலம் இருக்கிறது.
 வரலாறு என்பது முடிந்து போன ஒரு காலம். அதனை நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால், வரலாற்றை மறந்த ஒருவன் சுய  நினைவை இழந்தவனாக கருதப்படுபவனாவான் என ஒரு வரலாற்று பேராசிரியர் குறிப்பிடுகிறார்.கடந்த காலத்தில் நாம் என்னவாக இருந்தோம் என்பதை அறிந்தால் தான் எதிர்காலத்தில் நாம் என்னவாக இருக்கபோகிறோம் என்பதை தீர்மானிக்க முடியும்.

 நம்முடைய முன்னோர்களுக்கு எதெல்லாம் தெரிந்திருக்கிறது. இதை நாம் அறிந்திருக்கின்றோம். என்னுடைய மொழி என்னுடைய நிலம் தொன்மை வாய்ந்தது என்பதை எல்லாம் நாம் அறியும்போது,  இவையெல்லாம்  எதிர்காலத்தில் சாதிப்பதற்கு தூண்டுகின்ற வகையில் தான் நாம் ஒவ்வொருவரும் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு கடந்த நான்கு வருடங்களிலே  பண்பாட்டு தளத்தில் தொடர்ச்சியாக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

மொழியின் தொன்மை குறித்து கீழடி நமக்கு எடுத்துச் சொன்னது. இந்த குடியின் பெருமை குறித்து அதிரம்பாக்கம், பட்டறைப் பெரும்புதூர் நமக்கு நிறைய சொன்னது. இந்த தமிழ் பெருங்குடி மக்கள் பெற்று இருந்த நாகரிகம், அவர்கள் பெற்ற தொழில்நுட்ப அறிவு என்பதற்கு மயிலாடும்பாறையில் கிடைக்கக்கூடிய சான்றுகளை தாண்டி சிவகளையினுடைய முடிவுகள் இந்திய துணை கண்டத்தில் இரும்பினுடைய பயன்பாட்டை இரும்பின் தொழில்நுட்பத்தை அறிந்து அந்த தொழில்நுட்பத்தை உணர்ந்து படைக்கலன்களையோ அல்லது உழவு தொழில்களுக்கான கருவிகளையோ உருவாக்கிய ஒரு சமுதாயம் தமிழ் சமுதாயமாகத்தான் இருந்தது. அது 5000 வருடத்திற்கு முன்பாகவே நாம் அதைப் பெற்றிருக்கின்றோம்.நம் முன்னேர்கள் இதனை எல்லாம் அறிந்திருக்கிறார்கள். என்னுடைய மொழி மற்றும் நிலம் இத்தகைய தொன்மை வாய்ந்ததென நாம் அறியும் போது இவையெல்லாம் நமது எதிர்காலத்தில் சாத்திக்க தூண்டுகிறது.

வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில்  பார்க்கின்ற பொழுது தான் எத்தகைய அளவிற்கு அங்கு தொழில் வளர்ச்சி அடைந்த இடமாக வெம்பக்கோட்டை விஜயகரிசல் குளம் இருக்கிறது.இதற்கு முன்னே இருக்கக்கூடிய மன்னர்கள் சாசனங்கள், சங்க இலக்கியங்கள் தமிழ் இலக்கிய வளங்கள் மூலமாக அறிந்து கொள்ளக்கூடிய செய்திகள் இருந்தாலும் கூட அவற்றை எல்லாம் எழுதி வைக்கககூடிய நிலைமை பல அரசர்களுக்கு இல்லை.அதனால் தான் நம்முடைய கல்வெட்டுகளில் இருந்தும், இலக்கியங்களில் இருந்தும், அகழாய்வுகள் மூலமும் கிடைக்கின்ற சான்றுகள்  ஆகியவைதான்இன்றைக்கு பெரிய அளவிலே  துணை புரிவதாக இருக்கிறது.
ஆங்கிலர்களுடைய வருகைக்குப் பிறகு ஒவ்வொரு மாவட்டங்களை அவர்கள் பிரிக்கின்ற பொழுதுதான் அந்த மாவட்டத்தினுடைய மொத்த விவரங்களை அறிந்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

  நம்முடைய  விருதுநகர் மாவட்டத்தின் உடைய வரலாற்றை நாம் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் அன்றைக்கு நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவராக இன்றைக்கு மத்திய அரசாங்கத்தில் செயலாளராக இருக்கக்கூடிய மதிப்புக்குரிய திரு.கிருஷ்ணன் அவர்கள் மற்றும் அவர்களுடைய துணைவியார்  அவர்கள் முயற்சியோடு அறிஞர் வேதாச்சலம் போன்றவர்களால் 1998 மற்றும் 1999 அன்றைக்கு   புத்தகத்தை உருவாக்கி தந்தார்கள். அதற்குப் பிறகு விருதுநகர் மாவட்டத்தின் உடைய வரலாறு இன்னும் தொல்லியல் நோக்கில் எழுதப்பட வேண்டும் என்று பாண்டிய நாட்டு வரலாற்று  ஆய்வு மையம் அந்த புத்தகத்தை கொண்டு வந்தது.

 ஆனால் அதற்குப் பிறகு இருக்கக்கூடிய இந்த விவரங்களை குறிப்பாக 1800 களிலிருந்து 1950 வரை இருக்கக்கூடிய விவரங்களை எழுத வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த மாவட்டத்தினுடைய புவியியல் அமைப்பை நன்றாக உணர்ந்தவர்கள் அறிவார்கள். இந்த மாவட்டத்தினுடைய ஒரு பகுதி இராமநாதபுரத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். இன்னொரு பகுதி அப்படியே திருநெல்வேலி மாவட்டத்தை பிரதிபலிப்பாக இருக்கும். இந்த மாவட்டத்தினுடைய வடக்கு பகுதி மதுரையை பிரதிபலிப்பதாகவும் இருக்கும்.  இந்த மூன்று மாவட்டங்களில் இருந்தும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் நாம் புவியியல் ரீதியாக பகுதிகளை இணைத்து விருதுநகர் மாவட்டத்தை உருவாக்கி இருந்தாலும் கூட விருதுநகர் மாவட்டத்திற்கு என்று தனித்த அடையாளங்கள் இருக்கிறது. அந்த தனித்த அடையாளங்கள் புவியியல் ரீதியாக மட்டுமல்ல தொழில், இலக்கிய,  தொல்லியல், வணிக, வியாபார ரீதியாக  எடுத்துக் கொண்டு போனால் பல இடங்களில் இது நிச்சயமாக இருக்கிறது. அது குறித்த தகவல்களை தொகுத்து இந்த புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு. தண்டபாணி, மாவட்ட சுற்றுலா அலுவலர் திருமதி உமா தேவி, முன்னாள் துணை வேந்தர்,சுவாமி விவேகானந்தா பல்கலைக்கழகம், சாகர்.(மத்திய பிரதேசம்) முனைவர் கே.ஏ.மணிக்குமார், இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி,உதவிப் பேராசிரியர்முனைவர் போ.கந்தசாமி, விருதுநகர் நகர மன்ற தலைவர் திரு.ஆர்.மாதவன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News