25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விராத் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விராத் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் .

 களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும்  இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் கோலி 2016-19 காலக்கட்டத்தில் ரன் மழை பொழிந்தார். சமீபத்திய போட்டிகளில் 'ஆப்-ஸ்டம்ப்பிற்கு' வெளியே வீசும் பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். இவரது பலவீனம் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அம்பலமானது. இதையடுத்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்தார்.வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவரது சேவை, அணிக்கு தேவை என இந்திய கிரிக்கெட் போர்டு கருதியது. இதனால், ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டது.

இந்த சமயத்தில் டெஸ்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றார். டெஸ்ட் போட்டியில் இருந்து கோலியும் நேற்று விடைபெற்றார். இது, இந்திய அணியில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.  டெஸ்ட் அரங்கில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் பட்டியலில் கோலி முதலிடம். இதுவரை 68 டெஸ்டில், 5864 ரன் (20 சதம், 18 அரைசதம்) குவித்துள்ளார். 

 இந்திய கேப்டன் பட்டியலில் டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றி பெற்றுத் தந்த  விராத் கோலி முதலிடம். இவரது தலைமையிலான இந்திய அணி, 68 டெஸ்டில், 40 வெற்றி (58.82% வெற்றி சதவீதம்), 11 'டிரா', 17 தோல்வியை பதிவு செய்துள்ளது. அடுத்த இரண்டு இடங்களில் தோனி (27 வெற்றி, 60 டெஸ்ட்), கங்குலி (21 வெற்றி, 49 டெஸ்ட்) உள்ளனர். * கோலி தலைமையில் இந்திய அணி, 43 மாதம் (2016 அக்., -2020 மே) டெஸ்ட் அணி தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தில் இருந்தது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News