25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மதிப்புமிக்க மழை நீர் சேமிப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மதிப்புமிக்க மழை நீர் சேமிப்பு.

50 ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் குடிநீர் தேவைக்கு இறக்குமதியை நம்பி இருந்த சிங்கப்பூர், இஸ்ரேல் ஆகிய நாடுகள். இன்று மழை நீர் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் ஆகியவற்றின் மூலம் நீர்ப்பற்றாக்குறை இல்லாதநிலையை எட்டியுள்ளன. மழைநீரை ஒரு மதிப்புமிக்க இயற்கை வளமாக உலக நாடுகள்அறிவித்து உள்ளன. மழைநீர் சேமிப் பின் பலன்கள் குறித்து விழிப்புணர்வுஏற்படுத்தி வருகின்றன.

வீடுகளில் சரியான மழைநீர் சேகரிப்பு அமைப்புக்களை நிறுவினால், வீடுகளில் விழும் மழைநீர் தெருவில் ஓடி சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுவது தடுக்கப்படுகிறது. மழைநீரை சேமிப்பதால், வீட்டில் உள்ள ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து விடுகிறது.

பொதுவாகவே பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரில் உப்புத்தன்மை கலந்து காணப்படும். மழைநீர் சேகரிப்பு மூலம் சேகரிக்கப்படும் மழைநீர் இயற்கையாகவே மென்மையாகவும், ரசாயனங்கள், உப்பு மற்றும் தாதுக்கள் இல்லாத தூய நீராக இருப்பதால், தாவர வளர்ச்சிக்கும் மண்ணை வளமாக்கவும் உதவுகிறது.

விவசாயிகள் பாசனத்திற்காக மழைநீரை சேமித்து வைக்கும்போது, வறட்சி நிலைமைகளில் விவசாயம் தங்கு தடையின்றி நடைபெற உதவுகிறது. பூமியின் நீரில் 97 சதவீதத்திற்கும் அதிகமானவை கடல்களில் உப்பு நீராக காணப்படுகின்றன. குடிக்க தகுந்த நீர் வெறும் 3 சதவீதம்தான். எனவே.. மழைநீர் என்பது அனைத்தையும் விட மதிப்புமிக்கது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News