இயற்கையாக முகம் ஜொலிக்க ஆவாரம்பூ
வெயிலில் கருத்து போகும் முகத்தை ஆவாரம் பூ பொலிவடைய செய்யும்.ஆவாரம்பூ பொடியுடன் ஒரு ஸ்பூன் கசகசா சேர்த்து காய்ச்சாத பசும்பால் கலந்து நைசாக அரைத்து சற்று அதிகமாக பற்று போல முகத்திலும், கழுத்தை சுற்றிலும், தடவி வந்தால் தேமல், கருமை நிறம் போன்றவை மாறி பளிச்சென இருக்கும் . தங்கம் போல் மினுமினுக்க, இயற்கையாக முகம் ஜொலிக்கும்.இந்த பூக்களை நம் சருமத்திற்கு அடிக்கடி பயன்படுத்தும் போது பூவினும் மென்மையான சருமத்தை பெறலாம்.
0
Leave a Reply