தஞ்சைப் பெரியகோயில் ஆயிரம் ஆண்டு அதிசயம்.
ஆகாச வடிவத்தைப் பறைசாற்றும் வடிவம்.தஞ்சை பெரிய கோவிலில் கருவறையில் உள்ள12 அடி சிவலிங்கத்தை சுற்றிக்6அடி இடைவெளி விட்டு மற்றொரு வலிமையான சுவர் கட்டப்பட்டுள்ளது அவைகளின் மீதுதான் அடுக்குகளைக் கொண்ட இந்த மாபெரும் விமானம் கட்டப்பட்டுள்ளது. அடுக்குகளின் நடுப்பகுதி வெற்றிடமாகவே உள்ளதுதான் இந்தக் கட்டடக் கலையின் மற்றொரு அதிசயம்.14வது அடுக்கின் மீது88டன் எடையுடைய சிகர கல் மற்றும்12 அடி உயர கும்பக் கலசத்தைத் தாங்கியுள்ள மேல் அமைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இது தனதுஎடையின் வலிமையால் அதன் கீழுள்ள மொத்த கட்டமைப்பையும் உறுதி குலையாமல் அழுத்தி நிற்கச் செய்கிறது இது தான் அந் நாளைய தமிழர் அறிந்திருந்த கட்டடக் கலையின் சிறப்பாகும்.கருவறையின் மீது கட்டிய மிகப்பெரிய விமானமே இக்கோயிலின் பெரும் சிறப்பாக. போற்றப்படுகிறது.தஞ்சை பெரிய கோவிலின் விமானம்216(66 மீட்டர்) அடிகள் உயரம் கொண்டது. இந்த விமானம் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கல், கிரானைட் ஆகும். கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள கலசம், ஒரே கல்லால் செய்யப்பட்டு, 80 டன் எடையுடையது.
0
Leave a Reply