25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெம்பக்கோட்டை சாலையில்  சாத்தூர் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு  அமைச்சர்  அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெம்பக்கோட்டை சாலையில் சாத்தூர் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி, வெம்பக்கோட்டை சாலையில்  (25.06.2025) கலைஞர் மேம்பாட்டுத்திட்டம் 2025-2026-ன்  கீழ், ரூ.6.79 கோடி மதிப்பீட்டில்  சாத்தூர் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.பின்னர், சாத்தூர் நகராட்சியில், மேலக்காந்தி நகர் தொடக்கப்பள்ளியில் மாநில நிதிக்குழு பள்ளி மேம்பாட்டு மானியம் 2023-2024 திட்டத்தின் கீழ், ரூ.86 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைக் கட்டிடத்தை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதிலும், விரைவாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை ஏற்படுத்துதற்கு பல்வேறு திட்டங்கைள வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்;டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு நிதித்திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் இன்று வெம்பக்கோட்டை சாலையில், கலைஞர் மேம்பாட்டுத்திட்டம் 2025-2026-ன்  கீழ், ரூ.6.79 கோடி மதிப்பீட்டில் சாத்தூர் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.

இந்த புதிய பேருந்து நிலையமானது, 20 பேருந்து வழித்தடம், 24 கடைகள்,ஒரு உணவகம், ஒரு ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள், ஒரு இருசக்கர வாகன காப்பகம், 3 பயணிகள் காத்திருப்பு அறைகள், 2 அலுவலக அறைகள், ஒரு தாய்மார்கள் பாலுட்டும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 1.82 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட உள்ளன.மேலும், சாத்தூர் நகராட்சியில், மேலக்காந்தி நகர் தொடக்கப்பள்ளியில் மாநில நிதிக்குழு பள்ளி மேம்பாட்டு மானியம் 2025-2026 திட்டத்தின் கீழ், ரூ.86 இலட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.இந்த வகுப்பறை கட்டடமானது தரைத்தளத்தில் இரண்டு வகுப்பறைகள் 132.35 சதுர மீட்டர் அளவிலும், முதல் தளத்தில் இரண்டு வகுப்பறைகள் 132.35 சதுர மீட்டர் பரப்பளவிலும் கட்டப்பட்டுள்ளது.இதுபோன்ற உட்கட்டமைப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு  முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், சாத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.குருசாமி, சாத்தூர் நகராட்சி ஆணையாளர் திருமதி ரா.ஜெகதீஸ்வரி, சாத்தூர் நகராட்சி பொறியாளர் திருமதி வி.சத்திய நாகராணி, சாத்தூர் நகர்மன்ற துணைத்தலைவர் திரு.பா.அசோக், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News