சாத்தூர் நகராட்சி மற்றும் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பராமரிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி மற்றும் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பராமரிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, IAS., அவர்கள் (12.11.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி சாத்தூர் நகராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நகராட்சி சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டு, பழுதாகியுள்ள சாலையின் (Potholes and Patch Work) பணியினை விரைந்து துவங்கி, முடித்திட தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர்வெம்பக்கோட்டைஊராட்சிஒன்றியத்தில்,கீழகோதைநாச்சியார்புரத்தில்சாத்தூர்,திருவேங்கடபுரம்ஊரகசாலையினையும்,வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தாயில்பட்டி - பேரநாயக்கன்பட்டி ஊரக சாலையினையும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பழுதாகியுள்ள சாலையின் (Potholes and Patch Work) பணிகளை விரைந்து துவங்கி, முடித்திட தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், எட்டநாயக்கன்பட்டி கிராமத்தில் கனிமவள நிதியின் கீழ் ரூ.34 இலட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1.85 லட்சம் மதிப்பில் சுப்பிரமணியபுரம் - தாயில்பட்டி சாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும்,தாயில்பட்டியில் 15ஆவது மானியக்குழு நிதியின் கீழ் ரூ.41.35 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார மையம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, நகராட்சி ஆணையர், உதவி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.
0
Leave a Reply