ஆண்டாள் படைப்புலகம் என்ற பொருண்மையில் நடத்தப்பட்ட ஒரு நாள் தேசியக் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் (23.01.2025) மாவட்ட நிர்வாகம், கரிசல் இலக்கிய கழகம் மற்றும் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரி இணைந்து, ஆண்டாளின் படைப்புலகம் என்ற பொருண்மையில் நடத்தப்பட்ட ஒரு நாள் தேசியக் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர்முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.கரிசல் இலக்கிய கழகத்தின் சார்பாக நமது மாநிலத்தில் இருக்கக்கூடிய பல்வேறு கல்லூரிகளில் ஒவ்வொரு தலைப்பிலும் தமிழ் கருத்தரங்குகளை நடத்தி கொண்டிருக்கிறோம். இன்று ஆண்டாளின் படைப்புலகம் குறித்து நமது மண்ணில் 12 நூற்றாண்டுகளுக்கு முன்பாக அவதரித்து தன்னுடைய செழுமையான தமிழ் பாடல்களால் பக்தி இலக்கியத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் மிகப்பெரிய கொடை அளித்த கோதை நாச்சியாரின் படைப்புகள் குறித்து இன்று தமிழ்த்துறை மாணவர்களும் மற்ற மாணவர்களும் அதை அறிந்து கொள்வதற்காக நடத்தக்கூடிய இந்த ஒரு நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது.
ஆண்டாளின் படைப்புகளில் இருக்கக்கூடிய தமிழ் சுவையை அதில் இருக்கக்கூடிய காலம் கடந்து நிற்கக்கூடிய பல்வேறு பண்பாட்டு கூறுகளையும் புரிந்து கொள்கின்ற பொழுது அது உலகம் முழுமைக்கான படைப்பு என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
கவிஞன் என்பவன் காலக் கண்ணாடி. கண்ணதாசன் கவிஞன் பற்றி ஒரு வரையறை சொல்கின்ற பொழுது கருப்படு பொருளை உருப்பட வைப்போன் கவிஞன் யான் ஒரு காலக் கணிதம் என்று குறிப்பிடுகிறார். அவர்கள் வாழக்கூடிய காலத்தை கண்ணாடி போல் பிரதிபலிப்பது மட்டுமில்லாமல், சில நூற்றாண்டுகள் கழித்து உருவாக்கக்கூடிய சமுதாயத்திற்கும் பொருத்தம் உள்ளதாக ஒரு கவிதை இருக்கும் என்றால் அதுதான் காலத்தை கடந்து கொண்டு நிற்கக்கூடிய கவிதைகள். அப்படி எழுதக்கூடியவர்கள் தான் காலக் கணிதமாக நிற்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு காலக்கணிதமாக ஆண்டாளின் படைப்புகள் இருக்கின்றன என்பதை அவற்றை முழுவதுமாக வாசிக்கின்ற பொழுது புரிந்து கொள்ள முடிகிறது. ஆண்டாளின் படைப்புகளை நுணுக்கமாக பார்த்தால் அது இயற்iகையை சார்ந்தே தான் இருக்கும். மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்ற திருப்பாவையின் முதல் பாடலை எடுத்து கொண்டால் அது இயற்கையை சார்ந்ததாக இருக்கும். கதிரவனை போற்றக்கூடியதாக இருக்கும். இயற்கையை போற்றக்கூடியதாக இருக்கும். இன்னும் ஆண்டாளின் பாடல்களை பார்த்தால் உயிர் பன்முகத் தன்மையை (டீஐழு- னுiஎநசளவைல) பற்றியதாக இருக்கும்.
விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப்பன்றி, மயில்கள், மான்கள் இவை எல்லாம் விவசாயத்திற்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நம்முடைய இயற்கை சமநிலை சில பத்தாண்டுகளில் மாறி மாறி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். மயில்களின் உடைய இனப்பெருக்கத்திற்கு காரணமாக இருக்கக்கூடிய மயில்களினுடைய முட்டை நரிகளுக்கு உணவாக இருக்கிறது.மேலும், மான்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப புற்கள் கிடைக்காமல் தன்னுடைய உணவிற்கு காட்டை விட்டு வெளியில் செல்லும் நிலைமை ஏற்படுகிறது. புலிகளின் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக மான்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.
எனவே, இயற்கை சமநிலை என்பது எல்லா காலக்கட்டத்திற்கும் பொருத்தமாக இருக்கிறது. ஆண்டாளின் உடைய திருப்பாவை முழுவதும் பார்த்தல் இயற்கை சமநிலையும், சின்ன சின்ன உயிரினங்களை பற்றியும் ஆண்டாள் தொடர்ச்சியாக பாடி கொண்டிருப்பார்.ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்ற பாடலில் ஐந்து உயிரினங்கள் ஐந்து இயற்கை சமநிலையை பற்றி கூறப்பட்டிருக்கும். இயற்கையை போற்றக்கூடிய பாடல்களாக பக்தி இலக்கியங்கள் அமைந்திருக்கிறது.ஆண்டாளின் பக்திசுவையுடைய பாடல்கள் அதாவது நாச்சியார் திருமொழி, திருப்பாவை அனைத்தையும் தாண்டி, பண்பாட்டு அளவில் பண்பாட்டு செல்வாக்கை செலுத்தக்கூடிய பாடலாக வாரணம் ஆயிரம் என்ற திருமணத்தில் பாடக்கூடிய பாடல்கள் என அனைத்து பாடல்களும் இன்றைக்கும் செல்வாக்கை செலுத்தக்கூடியதாக இருக்கிறது.
ஆண்டாளின் படைப்புகளில் நாச்சியார் திருமொழி பாடல்களில் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கக்கூடிய தொடர்பு மற்றும் முழு சரணாகதி தத்துவம் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் இன்றைக்கும் பேசக்கூடிய செல்வாக்கை செலுத்தக்கூடிய பக்தி இலக்கிய பாடல்களாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இது பக்தி நெறியையும் தாண்டி தமிழ் மொழிக்கு எத்தகைய ஆற்றலோடு இருக்கிறது என்று பார்த்தால் புதிய சொற்களை தமிழுக்கு பக்தி இலக்கியத்தால் அறிமுகம் செய்தது. அதற்கு முன்பு எளிய சொற்கள் இருந்தாலும் இன்னும் மிக எளிய சொற்களாக இன்றளவும் பயன்படக்கூடிய சொற்களை பக்தி இலக்கிய காலக்கட்டத்தால் தமிழுக்கு வழங்கியது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பாடலை ஒரு சந்த நயத்தோடு பொருள் புரிந்து படித்தால் எளிய புதுக்கவிதை போல தான் இருக்கும். அப்படி எளிமையான பதங்களில் எளிமையான கருத்துக்களில் புதிய தத்துவங்களோடு இயற்கை சமநிலையோடு பாடிய ஆண்டாளின் படைப்புகள் குறித்து விருதுநகர் மாவட்டத்தில் கொண்டாடுவது மிகவும் சிறப்பு.
ஏனென்றால் ஆண்டாள் கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கவிஞர். இயற்கையை போற்றிய கவிஞர், பக்தியை போற்றிய கவிஞர், பண்பாட்டை போற்றிய கவிஞர். அவர்களுடைய படைப்புகள் குறித்து இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக ஒரு நாள் கருத்தரங்கை கரிசல் இலக்கிய கழகம் நடத்துகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்தார்.இக்கருத்தரங்கில், கரிசல் இலக்கிய கழக செயலாளர் மரு.அறம், கல்லூரி முதல்வர் கல்லூரி பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply