25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் தேசிய விளையாட்டு 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் தேசிய விளையாட்டு 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

ஓட்ட பந்தயம் 

தமிழக வீரர் ராகுல் குமார் ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் (21.06 வினாடி), நிதின் (21.07) இரண்டு, மூன்றாவது இடம் பிடிக்க, வெள்ளி, வெண்கலப் பதக்கம் கிடைத்தன. ஒடிசா வீரர் அனிமேஷ் (20.58) தங்கம் வென்றார்.  தமிழகத்தின் தீபிகா, பெண்களுக்கான 'ஹெப் டத்லான்' போட்டியில், வெண்கலம் கைப்பற்றினார்.

தமிழகம் 74 பதக்கங்கள் வென்று, முதலிடத்தில் உள்ளது. 

தேசிய விளையாட்டில் இதுவரை தமிழகம் 21 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 74 பதக்கம் வென்று, 6வது இடத்தில் உள்ளது. சர்வீசஸ் அணி (49 தங்கம், 18 வெள்ளி, 19 வெண் கலம் என 86) முதலிடத்தில் உள்ளது. 

டென்னிசில் தங்கம்

தமிழகத்தின் அக்ஸ் பத் ரிநாத், லட்சுமி பிரபா ஜோடி,டென்னிஸ் கலப்பு இரட்டையர் பைனலில், 6-4, 6-1 என கர்நாடகாவின் நிக்கி, சோகா ஜோடியை வீழ்த்தி தங்கம் கைப்பற்றியது.  குஜராத்தின் ஜாவியாவை சர்வீசஸ் வீரர் இஷாக் இக்பால், 3-6, 6-4, 7-6 என  வென்று, தங்கம் வென்றார்.

குஜராத்தின் வைதேகி பெண்கள் ஒற்றையர் பைனலில், 6-4, 6-4 என நேர் செட்டில் மகாராஷ்டிராவின் ஜீல் தேசாயை வென்று தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

அரையிறுதியில் வீழ்ந்த ஆமோதினி (கர்நாடகா),  ஆகான்ஷா (மகா ராஷ்டிரா), வெண்கலப் பதக்கம் பெற்றனர்.

 9 பேரும் சாதனை

 11 பேர் பங்கேற்ற ,பெண்களுக்கான 10 கி.மீ., நடை பந்தயம் நேற்று நடந்தது.2 பேர் பாதியில் விலகினர். ஹரியானாவின் ரவினா (45.52 நிமிடம்), தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார். அடுத்து வந்த உத்தரகாண்ட் வீராங்கனைகள் ஷாலினி  (46.12), บយល់ (47.36), மான்சி (48.32), உ.பி.,யின் முனிதா (46.23), ரேஷ்மா (48.16), மோகவி (46.23, தமிழகம்), சேஜல் (49.33 மகா ராஷ்டிரா), மோனிகா (51.45, ஹரியானா) என 8 பேரும் தேசிய சாதனை படைத்தனர்.

தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நடக் கிறது. ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டி நேற்று நடந்தது. தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல், 16.50 மீ., நீளம் தாண்டி தங்கப்பதக்கம் கைப்பற் றினார்.

தமிழகத்தின் மற்றொரு வீரர் முகமது சலாஹு தீன், 16.01 மீ., தாண்டி, வெள்ளிப்பதக்கம் வென்றார். கேரளாவின் முகமது முஹாசின் (15.57 மீ.,) வெண்கலம் வசப்படுத்தினார்.   

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News