தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , இராசபாளையம் குறிஞ்சிச்செல்வர். கொ.மா.கோதண்டம் அவர்களுக்கு நினைவேந்தல்.
"இயற்கை அழகும்,நல்ல காற்றும்,அமைதியும்,பயமும் கலந்த மலைப்பாதைகளில் நடப்பதில் எனக்கு விருப்பம் அதிகம்"
-குறிஞ்சிச் செல்வர்.கொ.மா.கோ.
வனப்பு நிறைந்த வனப் பகுதியில் வாழ்கின்ற சூழலில் கொ.மா.கோ. படைத்த இலக்கியங்கள் தமிழ் இலக்கியத்தில் தனி இடம் பெற்றவை.
ஆரண்யகாண்டம், ஏலச்சிகரம், குறிஞ்சாம் பூ காட்டுக்குள்ளே இசை விழா - என பல படைப்புகளை வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம்.
குறிஞ்சி பற்றிப் பேசினாலே பூரித்துப் போகும் மலை நகைக்காரர்.
இராஜபாளையம் ,இலக்கிய ரசனையும் வாசனையும் மிகுந்த ஊர்.
இலக்கியம் - எங்கள் செல்வம் என்பதில் அதிகப் பெருமை எங்களுக்கு.
இராஜையின் இலக்கிய அன்பரை குறிஞ்சிச் செல்வரைப் போற்றிப் பேச
9.11.25 ஞாயிறு அந்தி மழைப் பொழுதில், அன்புடன் அழைக்கிறோம்.
0
Leave a Reply