25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மூக்கிரட்டை கீரை சிறுநீரகம் மற்றும் மூலம் பிரச்சனைகளை சரி செய்யும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூக்கிரட்டை கீரை சிறுநீரகம் மற்றும் மூலம் பிரச்சனைகளை சரி செய்யும்

 மூக்கிரட்டை கீரை வீட்டை சுற்றியும், சாலையோரங்களிலும், வயல் வெளிகளிலும் தரையில் படர்ந்திருக்கும்.சிறுநீரகம் மற்றும் மூலம் ஆகிய 2 பிரச்சனைகளுக்கும் தீர்வு காண இந்த மூக்கிரட்டை கீரையை தொடர்ந்து சாப்பிடலாம்.

மூக்கிரட்டை கீரையை சுத்தம் செய்து அம்மியில் மை போல அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து வாயில் போட்டு விழுங்கி வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும்.இப்படி காலை மாலை என தினமும்2 வேளை சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். அதேபோல, மூலக்கட்டி இருந்தாலும் சுருங்கி குணமாகும்.

இந்த கீரையுடன் அதன் தண்டுகளையும் சேர்த்து, நறுக்கி ஒரு பாத்திரத்தில்4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அது ஒரு டம்ளர் வரும்வரை காய்ச்சி குடித்தால் சிறுநீரகத்துக்கு நல்லது.சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், தொற்றுநோய்கள் இருந்தாலும் இந்த கீரை அதை குணப்படுத்திவிடும்.

மஞ்சள் காமலை இருப்பவர்கள் கீழாநெல்லியுடன் இந்த கீரையை சேர்த்து சாப்பிடலாம்.இந்த இலைகளை பேஸ்ட் போல அரைத்து கண்களில் தடவ கண் இமை வீக்கம் குணமாகும். இந்த வேரை உலர்த்தி பொடி செய்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் கண் நோய்கள் குணமாகும்.இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், உடல் எடையில் மாற்றம் காணலாம்.

மூக்கிரட்டை பொடியானது சிறந்த மலமிளக்கியாகவும்செயல்படுகிறது. மேலும் சில வகையான புற்றுநோய்கள் தீவிரமாவதையும் குறைக்க உதவுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News