25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி., ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலில் ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-1'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி., ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலில் ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-1'

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் முதன் முறையாக 828 புள்ளி பெற்று, இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, முதலிடத்தில் நீடிக்கிறார்.உலககோப்பை தொடரில் 29 வயதான இவர், நியூசிலாந்துக்கு எதிராக 109, வங்கதேசத்திற்கு எதிராக 34 ரன் எடுத்ததை அடுத்து, இந்த முன்னேற்றம்கிடைத்தது.

இரண்டாவது இடத்தில் சுமார் 100 புள்ளி வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்டுனெர் (731) உள்ளார். இவர் 6 இடம் முன்னேறினார். 2 இடம் முந்திய தென் ஆப்ரிக்க அணி கேப்டன் லாரா (716) 3வது இடம் பிடித்தார். நாட் சிவர் பிரன்ட் (711), ஆஸ்திரேலியாவின் பெத் மூனே (709) 4, 5வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.

இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் (603), 8 இடம் முன்னேறிய ஜெமிமா (596) 18, 19வதாக உள்ளனர். பவுலர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா (655), இரண்டு இடம் பின்தங்கி, 5வது இடம் பெற்றார். இங்கிலாந்தின் சோபி எக் லெஸ்டோன் (747) முதலிடத்தில் நீடிக்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News