25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஜப்பான் ஓபனில் சிந்து வெற்றி; காயத்தால் விலகிய சாத்விக்-சிராக் ஜோடி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜப்பான் ஓபனில் சிந்து வெற்றி; காயத்தால் விலகிய சாத்விக்-சிராக் ஜோடி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் சூப்பர்-750 பாட்மின்டன் தொடரில், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெற்றியுடன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மலேசியாவின் லிங் சிங் வோங்வை எதிர்கொண்ட சிந்து, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 21-14, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

மறுபுறம், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, டென்மார்க்கின் டேனியல் லங்கார்ட் - மட்ஸ் வெஸ்டர்கார்ட் ஜோடியுடன் மோதியது. முதல் செட்டை 19-21 என்ற கணக்கில் இழந்த நிலையில், சாத்விக்சாய்ராஜுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய ஜோடி போட்டியிலிருந்து விலகியது. இதனால் டென்மார்க் ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News