ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும் சப்போட்டா பழம்
நல்ல சுவை மிகுந்த பழங்களில் ஒன்று சப்போட்டாப் பழம். இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரம் இரும்பு போன்ற கனிமச் சத்து அதிக அளவு உண்டு. வைட்டமின் சி யும் உள்ளது.தொண்டையில் உண்டாகும் புண்களை ஆற்றும், இருமலைத் தடுக்கும், குடல் புண்ணை ஆற்றும், பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகளை நீக்கும். ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும்,நீரிழிவு வியாதிக்காரர்கள் உண்ணலாம். சிறு நீரக கோளாறை நீக்க வல்லது. மூல நோயைத் தணிக்கும் தண்மையுடையது சப்போட்டாப் பழம். நோயைத் தரும் எண்ணெய் நொறுக்குத் தீனிகளை விட பழங்கள் மென்மையானது. உடலுக்கு திடம் தருபவை. தினம் ஒரு பழம்.உங்கள்ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
0
Leave a Reply