ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கூடும் சங்கமம் விழா
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கூடும் சங்கமம் விழா முன்னாள் மாணவர்கள் சங்க கலையரங்கில் வைத்து நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் சங்கச் செயலர் சோமசுந்தரம் வரவேற்புரையாற்றினார். தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையுரையாற்றினார். சங்கப் பொருளாளர் வெங்கடேஸ்வரன் மாணவர் சங்க குறிப்புரை வழங்கினார். கல்லூரி பொறுப்பு முதல்வர் ராமகிருஷ்ணன் மதிப்புரை வழங்கினார். முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பலரும் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். சங்கத்தின் திட்ட பணிகள் குறித்து துணைத் தலைவர் குமார் ராஜா விளக்கிப் பேசினார். இந்நிகழ்வில் பல்கலைக்கழகத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், வேலைவாய்ப்பு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. நிறுவனத்தின் உரிமையாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவாக சங்கம ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெகநாத் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் 450 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், முன்னாள், இந்நாள் பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
0
Leave a Reply