25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கார் மீது அதிகம் ஆர்வம் உடைய  “ புஷ்பா “ நாயகன் அல்லு அர்ஜுன் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கார் மீது அதிகம் ஆர்வம் உடைய  “ புஷ்பா “ நாயகன் அல்லு அர்ஜுன் .

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் சிறுவயதிலேயே சினிமாவில் நடித்து வரும் இவருக்கு கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஹிட் கொடுக்கும் வகையில் படங்கள் அமைந்து வருகிறது.அல்லு அர்ஜுன் கேரியரில் மைல் கல் ஆக அமைந்த படம் தான் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் மிரள விட்டிருந்தார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாகி இருந்தது.

இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் ஒரு படத்திற்கு சுமார்100கோடி வரைசம்பளம் பெற்று வருகிறார். விளம்பரங்களில் நடிக்க நான்கு கோடி வரை அல்லு அர்ஜுனுக்கு கிடைக்கிறது.ஹைதராபாத்தில் அல்லு அர்ஜுனுக்கு சொகுசு பங்களா  மதிப்பு  100 கோடி ஆகும் இருக்கிறது. அல்லு அர்ஜுன் 80 கோடி மதிப்பில் சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்துள்ளார். 450 கோடி மதிப்பில் அல்லு அர்ஜுனுக்கு சொத்து உள்ளது.

மேலும் கார் மீது அதிகம் ஆர்வம் உடைய அல்லு அர்ஜுன் ஐந்து வகையான கார்களை வைத்திருக்கிறார்.7 கோடி மதிப்பிலான ஃபால்கான் என்ற வேனிட்டி வேன் வைத்துள்ளார். மேலும் 6.5 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ், 1.78 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் கார்களும் இருக்கிறது.மெர்சிடிஸ், ஜாகுவார் 99 லட்சம் மற்றும் ஹம்மர் 75 லட்சம் போன்ற கார்களும் அல்லு அர்ஜுன் கைவசம் இருக்கிறது. தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்த வசூல் மன்னனாக புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் வலம் வர இருக்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News