சொக்கர் கோயிலில் மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா
ராஜபாளையம் சொக்கர் கோயில் மாசி மக பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு தேர்த் திருவிழா நடந் தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.தினமும் பல்வேறு அலங்காரங்களில் சுவாமி வீதி உலா வந்தவுடன் விழா நாட்களில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பன்னிரு திருமுறை பாராயண நிகழ்ச்சி, பாரம்பரிய இன்னிசை கச்சேரிகள் நடந்தது.
இதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம், தெப் போற்ஸவத்தை அடுத்து நேற்று காலை தேர்திரு விழா நடந்தது. கோயி லில் அலங்கரிக்கப்பட்டதேரினை ராம்கோ குரூப் சேர்மனும் கோயில் பரம் பரை அறங்காவலருமான பி.ஆர். வெங்கட்ராமராஜா வடம் பிடித்து துவக்கி, ராம மந்திரம் வரை தரிசனத்திற்காக தேர் வீதி உலா வந்து கோயிலை சுற்றி நிலையை அடைந்தது. தேர்த் திருவிழா ஏற்பாடுகளை ராம்கோ குரூப் சார்பில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
0
Leave a Reply