25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் SSC Combined Gradual Level (CGL) CBT -1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் SSC Combined Gradual Level (CGL) CBT -1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB, மற்றும் SSC & RRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. அலுவலகத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான  புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் Wifi வசதியுடன் கணினி ஆய்வகம் உள்ளது.

 இலவசப் பயிற்சி வகுப்பு விவரம்:

தேர்வு: பணியாளர் தேர்வு வாரியத்தின் *SSC Combined Graduate Level (CGL) - CBT 1* தேர்வு.

தொடக்க நாள்: *10.06.2026 (புதன்கிழமை)* முதல் தினசரி வகுப்புகள் நடைபெறும்.

இடம்: விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகம்.

பயிற்சியின் முக்கிய அம்சங்கள்:

திறன் வாய்ந்த சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.

இலவச பாடவாரியான தேர்வுகள் (Topic-wise Tests) மற்றும் முழு மாதிரித் தேர்வுகள் (Full Mock Tests) தொடர்ச்சியாக நடத்தப்படும்.

 பதிவு செய்யும் முறை:

இவ்வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள விருதுநகர் மாவட்டத் தேர்வர்கள் கீழே உள்ள வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்:

 1. மின்னஞ்சல் வழியாக: studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பலாம்.

 2. நேரடிப் பதிவு: விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு *நேரடியாகச் சென்று* தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.

 எனவே SSC Combined Gradual Level (CGL) தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு  மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News