25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முதியோரின் தூக்கமின்மையைச் சரி செய்ய  உதவுங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதியோரின் தூக்கமின்மையைச் சரி செய்ய  உதவுங்கள்.

முதியோரின் தூக்கமின்மைக்கு காரணம் அறிய முயலவேண்டும். அதிக சத்தத்தைக் குறைத்துக் கதவை மூடி அமைதியான சூழ்நிலையை உண்டாக்க வேண்டும்.

முதியோர் பகலில் தூங்காமல் இருக்க அறிவுரைகளைக் கூற வேண்டும். பகலில் ஏதாவது சிறு வேலைகளைச் செய்யச் சொல்ல வேண்டும்.

இரவில் உணவு உண்டபின் தேநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

படுக்கும் போது சரியான தலையணைகளை வைத்துச் சௌகரியமான நிலையில் படுத்து உறங்கச் சொல்ல வேண்டும்.

தூக்க மாத்திரைகள் பகலில் கொடுக்காமல் இரவில் கொடுக்கப்பட வேண்டும்.

நீர் பிரியக்கூடிய மாத்திரைகள் பகலில் கொடுக்கப்பட வேண்டும். இரவில் கொடுத்தால் தூக்கத்தைக் கெடுக்கும்.

முதியோர் சிலருக்கு படுத்ததும் தூக்கம் வராது. அவர்களை தொலைக்காட்சி  பார்ப்பது, பத்தகங்கள் படிப்பது போன்றவத்தில் ஈடுபடச் சொல்லலாம்.இம் முறையில் அவர்களுக்கு அசதிஏற்பட்டால் உடனே  படுக்க சொல்ல வேண்டும்.

படுப்பதற்கு முன்பு பாலில் சற்று தேன் கலந்து அருந்தினால் சில ருக்குச் சுகமான தூக்கம் வரலாம், பிரார்த்தனை, தியானம் போன்ற செயல்பாடுகள் மூலமாகவும் தூக்கம் வரலாம்.

 தூங்கும் அறையில் அதிக வெளிச்சம் இல்லாமலும்,வெளிச்சத்தைத் தவிர்க்கத் திரை போட்டும் வைக்க வேண்டும்.

 படுக்கை சுத்தமாக, ஈரமில்லாமல், சுருக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். தூங்கும்போது முதியோர் அணியும் ஆடை அவர்களுக்கு வசதி உள்ளதாக இருக்க வேண்டும்.

படுப்பதற்கு முன் சிறுநீர் கழித்துவிட்டுப் படுக்கச் சொல்லவும். இதன் மூலம் தூக்கத்தின் இடையில் எழுந்திருப்பதைத் தவிர்க்கலாம்.

 பிள்ளைகள் இரவில் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, வானொலி சத்தமாக வைப்பது போன்றவை முதியோரின் தூக்கத்தைப் பாதிக்கக்கூடும். ஆகவே. முதியோருக்குத் தொந்தரவு இல்லாமல், அதிக சத்தமாக வானொலி மற்றும் தொலைக்காட்சி வைக்காமல் அவர்கள் அமைதியுடன் தூங்க உதவ வேண்டும்.

 மூத்தகுடிமக்களுக்குத் தூக்கம்,ஓய்வு அவசியம் தேவை என்பதை உணர்ந்து அவர்கள் தூங்கும் பகுதியில் அதிக சத்தங்கள் ஏற்படாமலும் குடும்பத்தினர் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கடைசி முயற்சியாகவே தூக்க மாத்திரையை, மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News