25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மணக்கும் மல்லிகைப்பூ
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மணக்கும் மல்லிகைப்பூ

மணக்கும் மல்லிகைப்பூ, தலையில் சூடுவதற்கு மட்டுமல்ல,பெண்களின் கருபிரச்னைகளுக்கு  முக்கிய மருந்தாக மல்லிகைப்பூ உள்ளது.மல்லிகைப் பொடியை தேனில் சேர்த்து சாப்பிட்டால் கருப்பைவலுவாகும்.மல்லிகைப் பூவை கொதிக்க வைத்து, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக பிரச்னைகள் நீங்கும்.
வயிற்று கோளாறு மற்றும் அஜீரன பிரச்னைகளுக்கு மல்லிகைப்பூ சாறு நல்லது.வயிற்றுப்புழுக்களையும் மல்லிகைப் பூ அழிக்கிறது
மல்லிகைப் பூ பொடி, சிறுநீரக கற்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது.நீர் பாதையில் இருக்கும் எரிச்சலை கட்டுப்படுத்தும்
நரம்பு தளர்ச்சிக்கு மல்லிகைப் பூ பொடி சிறந்த மருந்து.தாய் பால் கட்டிக்கொண்டால்மல்லிகைப்பூ பொடிையை மார்பில் போட, பால் கட்டி கரையும். 

மல்லிகைப்பூக்களைநீரில்போட்டுகொதிக்கவைத்துஅந்தநீரைப்பனங்கற்கண்டுடன்பருகிவந்தால்,கண்களில்ஏற்படும்சதைவளர்ச்சிகுறைந்து,படிப்படியாகபார்வைதெரியஆரம்பிக்கும்.மல்லிகைப்பூக்களை நன்றாக அரைத்து உடலில் வீக்கம் மற்றும் எரிச்சல் நமைச்சல் இருக்கும் இடங்களில் பூசி வந்தால் எளிதில் குணமடையும். 

நமது குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் வயிற்றின் செரிமானத்தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்கவைத்து அதனை வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும். அதைப்போலவே அஜீரணக் கோளாறினால் ஏற்படும் வயிற்றுப்புண்களுக்கும். வாய்ப்புண்களுக்கும் மல்லிகை பூ சிறந்த மருந்து.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News