எலும்புகள் உறுதியாக இருக்க
கேழ்வரகில் சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
எள்ளில் செய்த உணவை சாப்பிட வேண்டும்.
பப்பாளி, பீன்ஸ், பாதாம் ,முந்திரி,நட்ஸ். பிரண்டை ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள எலும்புகள் உறுதியாக. வலுவாக இருக்கும்.
கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள எலும்புகள் பலமாக இருக்கும்.
வாழைத்தண்டு, முள்ளங்கி, சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்க் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கலாம். ஆஸ்துமா, மார்பு சளி போன்றவை நீங்க, மலட்டுத்தன்மையை அகற்ற முருங்கை கீரை சூப் நல்லது.
மஞ்சளை அனலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரித்து, பின்பு அந்த சாம்பலை தேனில் கலந்து சாப்பிட குடல் புண் குணமாகும்.
0
Leave a Reply