கின்னஸ் சாதனைப் படைத்த அட்லியின் 'ராக்கா'.
இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராக்கா' படம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. ஒரே நேரத்தில் 37 நடிகர்களை நிகழ்நேர Motion Capture (மோஷன் கேப்சர்) தொழில்நுட்பம் மூலம் பதிவு செய்ததற்காக இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
சென்சார்கள் மற்றும் கேமராக்கள் உதவியுடன் நடிகர்களின் உடல் அசைவுகள் மற்றும் முகபாவனைகளைத் துல்லியமாக டிஜிட்டல் கதாபாத்திரங்களாக மாற்றும் நவீன தொழில்நுட்பமே இதுவாகும். இந்தச் சாதனைக்கான அதிகாரப்பூர்வ கின்னஸ் சான்றிதழை அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி பெற்றுள்ளனர். பான்-இந்தியா அளவில் மட்டுமல்லாமல், ஆங்கிலம், கொரிய மற்றும் சீன மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply