25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வில்வித்தை .may10 th and 11th
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வில்வித்தை .may10 th and 11th

 உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 2  சீனாவின் ஷாங்காய் நகரில் , பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர்  பிரிவு, அரையிறுதியில் இந்தியாவின் மதுரா,துருக்கி யின் ஹசல் போருனை 143-141 என வீழ்த்தினார்.

பைனலில் மதுரா, அமெரிக்காவின் கார்சனை சந்தித்தார். மதுரா 139-138 என வெற்றி பெற்று, உலக கோப்பை வில்வித்தையில் முதல் தங்கம் கைப்பற்றினார்.  

காம்பவுண்டு ஆண்கள் அணிகளுக்கான பைனலில் அபிஷேக் வர்மா, ரிஷாப் யாதவ், ஓஜாஸ் பிரவின் இடம் பெற்ற இந்திய அணி, செபாஸ்டியன், லுாயிஸ், ரோட்ரிகோ அடங்கிய மெக்சிகோ அணியை சந்தித்தது. இதில் இந்திய அணி 232-228 என வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது.

பெண்களுக்கான பைனலில் மதுரா, ஜோதி, சிகிதா இடம் பெற்ற இந்திய அணி, 222-234 என மெக்சிகோவிடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. கலப்பு அணி போட்டியில் இந்தியாவின் மதுரா, அபிஷேக் ஜோடி, 144– 142 ,வெண்கலம் வசப்படுத்தியது. 

உலக கோப்பை வில்வித்தை 'ஸ்டேஜ்-2' சீனாவின் ஷாங்காய் நகரில்,பெண்கள் தனிநபர் 'ரிகர்வ்' பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் - தீபிகா குமாரி, தென் கொரியாவின் லிம் சிஹியோன் -மோதினர்.  இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என, 7 பதக்கம் கிடைத்தது.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News