25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மீன்பாசி குத்தகை உரிமையினை மூன்று ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மீன்பாசி குத்தகை உரிமையினை மூன்று ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் வத்ராயிருப்பு வட்டத்தில் உள்ள குணவந்தனேரி, எஸ்.கொடிக்குளம், தாமரைக்குளம் மற்றும் இராஜபாளையம் வட்டத்திலுள்ள மருங்கூர் மற்றும் குறவன்குளம் ஆகிய ஐந்து கண்மாய்களின் மீன்பாசி குத்தகை உரிமையினை மூன்று ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in  என்ற இணையதள முகவரியில் காணலாம்.  
 

தெளிவுரைகள் மற்றும் விவரங்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 114  B     27/1, வேல்ச்சாமி நகர், பி.ஆர்.சி.டெப்போ பின்புறம், விருதுநகர் 626 001 என்ற முகவரியில் இயங்கிவரும் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
(தொலைபேசி எண். 04562 - 244 707)  
மின்னஞ்சல் முகவரி : adfisheriesvnr@gmail.com
மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் மேற்காணும் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News