ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் (11.01.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பல்வேறு துறை சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாகவும் அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.நமது மாவட்டம் முன்னேற விளையும் மாவட்டமாக இருப்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.மனித வளர்ச்சி குறியீடு என்பது அங்கு இருக்கக்கூடிய மக்களின் தனிநபர் வருமானம் ஒவ்வொரு நபரும் எவ்வளவு வருவாய் ஈட்டுகின்றனர் என்பதை பொறுத்தும், அவர்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதுதான் வளர்ச்சி என கூறுகின்றனர்.
மேலும், நமது மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தையும் எடுத்து பார்த்தால், நமது மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டமாக செயல்பட்டு வருகிறது.இன்னும் பல மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் வளர்ச்சி வேறுபாடு அந்தந்த மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி மூலமாகவும், வேலை வாய்ப்புகள் மூலமாகவும் தான் தெரிகிறது.ஒரு நிர்வாகத்தில் கொள்கை முடிவுகளை செயல்படுத்தும் திறன் மட்டும் தான் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும், அதில் முக்கியமானதாக தனது செயல்பாடுகளை தொடர்ந்து கால நேரத்தோடு செய்வதால் அது வளர்ச்சிக்கும்,முன்னேற்றத்திற்கும் நம் மக்களை முன்னேற்றமடைய செய்யும்,
அந்தந்த வட்டாரங்களில் அடிப்படை வசதிகளை முறையாக சென்றடைய செய்ய வேண்டும் அப்பொழுதுதான் தான் நமது மாவட்டமும் வளர்ச்சியடைந்த மாவட்டமாக உருவாக்க முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
எனவே, அனைத்து பொதுமக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த நேரத்தில் நேரடியாக சென்று சேர்வதற்கு அரசின் விதிமுறைக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்புடைய அரசு அலுவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S., செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வெண்ணிலா, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு. அரவிந்த் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply