25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


21 ST MAY விளையாட்டு போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

21 ST MAY விளையாட்டு போட்டிகள்

டென்னிஸ் 

மே 25-ஜூன் 8ல் பிரெஞ்ச் கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. ஒற்றையர் தரவரிசையில் 170 வது இடத்திலுள்ள இந்தியாவின் சுமித் நாகல், 141 வது இடத்திலுள்ள அமெரிக்காவின் மிட்செல் குருகரை சந்தித்தார்.காலிறுதியில் நடந்த முதல் செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றிய சுமித் நாகல், அடுத்த செட்டையும் 6-1 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 14 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சுமித் நாகல் 6-1, 6-1 என்ற நேர் செட் டில் வெற்றி பெற்றார். 

பாட்மின்டன்

மலேசிய 'மாஸ்டர்ஸ் சூப்பர் 500' தொடர் கோலாலம்பூரில் நடக்கும் தகுதி சுற்றில், இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹூவாங் யுவை (சீன தைபே )வீழ்த்தி, பிரதான சுற்றுக்கு முன்னேறினார். 

துப்பாக்கி சுடுதல் 

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ஜெர்மனியில் நடக்கிறது. ஆண் களுக்கான 50 மீ., ரைபிள் புரோன் போட்டியில் இந்தியா சார்பில் அட்ரியன் கர்மாகர் பங்கேற்றார். இவர் 2010 டில்லி காமன்வெல்த் துப்பாக்கிசுடுதலில் தங்கம் வென்ற இந்தியாவின்  ஜோய்தீப்  கர்மாகரின் மகன் சிறப்பாக செயல்பட்ட அட்ரியன்,மொத்தம் 626.7 புள்ளி பெற்று, இரண்டாவது இடம் பிடிக்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. சுவீடனின் ஜெஸ்பெர் (627.0) தங்கம் வென்றார். மற்ற இந்திய வீரர்கள் ரோஹித் (620.2) 12, நிதின் வேதாந்த் (614.4) 35வது இடம் பெற்றனர்.

பெண்களுக்கான 50 6., ரைபிள் புரோன் போட்டியில் இந்தியாவின் அனுஷ்கா, 623.5 புள்ளி மட்டும் பெற, 6வது இடம் தான் கிடைத்தது. மற்றொரு இந்திய வீராங்கனை பிராச்சி (618.3) 24 வது இடம் பிடித்தார். இதுவரை ஒரு வெள்ளி மட்டும் வென்ற இந்தியா, பதக்க பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News