25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


15TH APRIL விளையாட்டு போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

15TH APRIL விளையாட்டு போட்டிகள்

டேபிள் டென்னிஸ், 

 'அல்டிமேட் டேபிள் டென்னிஸ்' (யு.டி.டி.,) தொடர் இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில், 8 அணிகள் பங்கேற்கும் 6வது சீசன் (மே29 ஜூன்15) ஆமதாபாத்தில் நடக்கவுள்ளது. 

இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம்நேற்று மும்பையில் நடந்தது. 56 பேர்ஏலத்தில் இடம் பிடித்தனர். ஒவ்வொரு அணியும் ரூ. 50 லட்சம் வரை செலவு செய்தன. அடிப்படை தொகை என4 பிரிவுகளாக (ரூ.11, 7,4,2 லட்சம்) பிரிக்கப்பட்டன.

கோவா அணி இந்தியாவின் ஹர்மீத் தேசாயை  வீரர்களை தக்கவைக்கும் விதியின் அடிப்படையில் ரூ.14 லட்சத்துக்கு தன் வசப்படுத்தியது.  

ரூ.14.1 லட்சம் கொடுத்து, இந்தியாவின் தேசிய சாம்பியன் தியா சிட்டா லே வை டில்லி அணி தட்டிச் சென்றது. 

ரூ. 12 லட்சம் கொடுத்து, இந்தியா வீராங்கனை மணிகா பத்ராவை ஆமதாபாத் அணி  கொண்டு தட்டிச் சென்றது. 

செஸ்  

பெண்களுக்கான  'கிராண்ட் ப்ரி' செஸ்,புனேயில் சர்வதேச செஸ்கூட்டமைப்பு ('பிடே') சார்பில் ஐந்தாவது தொடர் நடக்கிறது.

நேற்று இரண்டாவது சுற்று போட்டி நடந்தன. இந்திய வீராங்கனைகள் திவ்யா, வைஷாலி ,17வது நகர்த்தலில் வைஷாலி தவறு 'செய்தார்., போட்டியின் 26 வது நகர்த்தலில் திவ்யா வெற்றி பெற்றார்.

இந்தியாவின் ஹரிகா, போலந்தின் அலினா மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. சீனாவின் ஜு ஜினெர், மங்கோலியாவின் பக்துயாக்கை வீழ்த்தினார். இரண்டு சுற்று முடிவில் திவ்யா (2.0), ஜுஜினெர் (2.0), ரஷ்யா T வின் போலினா (1.5) 'டாப்-3' இடத்தில் உள்ள னர். ஹம்பி (1.0), 5வது, ஹரிகா (0.5), 10 வது இடத்தில் உள்ளனர்.

பாட்மின்டன்  

புதிய தரவரிசை பட்டியல்  சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் வெளியானது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து, சமீபத்திய சீன தொடரில், இரண்டாவது சுற்றில் தோற்றதால்,ஒரு இடம் பின்தங்கி, 18 வது இடம் பிடித்தார். மாளவிகா (22), ரக்சித்தா ஸ்ரீ (42), அனுபமா (44), ஆகர்ஷி (49) உள்ளிட்டோர் 'டாப்-50' பட்டியலில் உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென், 2 இடம் பின்தங்கி, 18வது இடம் பெற்றார்.பிரனாய் 30 வது இடத்தில் உள்ளார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News