25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


13TH APRIL ,விளையாட்டு போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

13TH APRIL ,விளையாட்டு போட்டிகள்

 டென்னிஸ் 

 'பில்லி ஜீன் கிங்' கோப்பை டென்னிஸ் 62வது சீசன் பெண்கள் அணிகளுக்கான 62வது சீசன்  புனே யில், 'ஆசிய - ஓசியானா - குரூப் 1' போட்டி நடந்தது. இதில் இந்தியா, தென் கொரியா, தாய்லாந்து, நியூ சிலாந்து, ஹாங்காங், சீன தைபே என 6 அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் வீழ்ந்த இந்தியா, அடுத்த மூன்று போட்டி யில் தாய்லாந்து, ஹாங்காங், சீன தைபே அணிகளை வென்றது.

கடைசி போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின   ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா 5-7, 6-3, 7-6 என தென் கொரியா , வின் சோஹியுன் பார்க்கை வீழ்த்தினார்.  

இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, பிரார்த்தனா தாம்பரே ஜோடி 6-4, 6-3 என தென் கொரியாவின் சோஹி யுன் பார்க், தபின் கிம் ஜோடியை வென்றது.முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் 4வது வெற்றி பெற்றது.

புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்த இந்தியா, 5 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது. 

வில்வித்தை 

 உலக கோப்பை வில்வித்தை அமெரிக்காவில் ('ஸ்டேஜ் 1') தொடர் கலப்பு இரட்டையர் 'காம்பவுண்டு' பிரிவு பைனலில் இந்தியாவின் ஜோதி சுரேகா, ரிஷாப் யாதவ் ஜோடி, சீனதைபேயின் ஹுவாங் ஐ-ஜோ, சீ-லுன் சென் ஜோடியை எதிர்கொண்டது. 

 இந்திய ஜோடி 153-151 (37-38, 38-39, 39-39, 39-36) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட் டிச் சென்றது. இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம். ஏற்கனவே ஆண்கள் இரட்டையர் 'காம்பவுண்டு' பிரி வில் இந்தியாவின் அபிஷேக், ரிஷாப் யாதவ் ஜோடி வெண்கலம் வென்றிருந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News