25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


11TH APRIL  விளையாட்டு போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

11TH APRIL விளையாட்டு போட்டிகள்

வில்வித்தை   

 உலக கோப்பை வில்வித்தை(ஸ்டேஜ் 1) தொடர் அமெரிக்காவில் ஆண்களுக்கான காம் பவுண்டு பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரிஷாப் யாதவ், அபி ஷேக் வர்மா, ஓஜாஸ் பிரவின் இடம் பெற்ற அணி, நான்காவது இடம் பிடித்தது.

அரையிறுதியில் இந்தியா, இத்தாலி மோதின. போட்டி  ஆனது. அடுத்து நடந்த 'ஷூட் ஆப்' முறையில் இந்தியா 27-29 என தோற்றது.

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, 230-223 டென் மார்க்கை சாய்த்தது.  

 பில்லி ஜீன் கிங்' டென்னிசில்..

 'பில்லி ஜீன் கிங்' கோப்பை சர்வதேச டென்னிஸ் தொடரின் 

பெண்கள் அணிகளுக்கான 62வது சீசன் தற்போது நடக்கிறது.இந்தியாவின் புனேயில் ஆசிய, ஓசியானா மண்டல பிரிவு போட்டி நடக்கிறது. இந்திய அணி, குரூப் ஏ-ல், தென் கொரியா, தாய்லாந்து, நியூசிலாந்து, ஹாங்காங், சீனதைபே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

முதல் போட்டியில் நியூசிலாந்திடம் (1-2) தோற்ற இந்தியா, அடுத்து தாய்லாந்து (2-1) என வீழ்த்தியது. நேற்று தனது மூன்றாவது போட்டியில் இந்திய அணி, ஹாங்காங்கை சந்தித்தது.

முதலில் நடந்த ஒற்றையர் போட்டி யில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி, ஹாங்காங்கின் ஹோ சிங் உ மோதினர். இதில் வைதேகி 7-6, 6-1 என எளிதாக வெற்றி பெற்றார்.

இரண்டாவது ஒற்றையரில் இந்தியா வின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ஹாங்காங் கின் ஹாங் வாங்கை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 7-6 என வசப்படுத்திய ராஷ்மிகா, அடுத்த செட்டை 2-6 நழுவ விட்டார். மூன்றாவது, கடைசி செட் டில் அசத்திய இவர், 6-3 என வென்றார்.முடிவில் ராஷ்மிகா 7-6, 2-6, 6-3 என வெற்றி பெற்றார். இந்திய அணி 2-0 என வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News