25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சீனா  அறிமுகம் செய்த 10 G  இண்டர்நெட்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சீனா  அறிமுகம் செய்த 10 G இண்டர்நெட்.

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் 3G, 4G வசதியே கிடைக்காத நிலையில் சீனா 10G இணைய சேவையை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் இன்னும் 5G நெட்வொர்க் முழுமையாக விரிவடையவில்லை என்று பேசிக்கொண்டிருக்கிறோம்.

சீனாவின் ஹெபே மாகாணம், சுனான் மாவட்டத்தில் ஹுவாய் மற்றும் சீனா யூனிகோம் நிறுவனங்கள் இணைந்து, 50G PON தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 10G பிராட்பேண்டை செயல்படுத்தியுள்ளன. இதில் 9,800 Mbpsக்கும் அதிகமான டவுன்லோட் வேகம், 1,000 Mbps அப்லோட் வேகம் எனக் கூறப்படுகிறது. வெறும் 2 நொடிகளில் ஒரு திரைப்படத்தை டவுன்லோடு செய்ய முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

 இத்தகைய நவீன இணையம், 8K வீடியோக்கள், கிளவுட் கேமிங், ஏஐ உள்நிறைந்த ஸ்மார்ட் ஹோம்கள், தொலை மருத்துவம் போன்ற உயர்நுட்ப சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

 இந்தியாவும் பின்னோக்கி இல்லை. பிரதமர் மோடி அறிவித்த 6G திட்டத்தின்படி, 2030ற்குள் இந்தியாவை 6G முன்நிலைக்குக் கொண்டு செல்ல முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது. இதற்காக Bharat6GAlliance எனும்அமைப்புஉருவாக்கப்பட்டுள்ளது.,6G யுகத்தை நோக்கி எடுக்கப்படும் திட்டமிடல், இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை உறுதி செய்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News