05 TH JUNE விளையாட்டு போட்டிகள்
வாலிபால்
ஆண்களுக்கான சர்வ தேச தேசிய லீக் வாலிபால் தொடர்உஸ்பெகிஸ்தானில் நடந்தது. 7 அணிகள் பங்கேற்றன. இந்திய அணி, ஈரான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தானுடன் 'ஏ' பிரிவில் இடம் பெற்றது. லீக் சுற்றில் இந்திய அணி துர்க்மெனிஸ்தான், பாகிஸ்தானை வீழ்த்தியது. ஈரானிடம் தோற்றது.
அடுத்து கஜகஸ்தானை வீழ்த்திய இந்தியா பைனலுக்கு முன்னேறியது. நேற்று இதில் மீண்டும் ஈரானை எதிர்கொண்டது. முதல் செட்டை 17,25 என இழந்த இந்தியா, அடுத்த செட்டை 20,25 என நழுவவிட்டது. மூன்றாவது செட்டையும் 19,25 என கோட்டை விட்டது. முடிவில் இந்திய அணி 0-3 என தோல்வியடைந்து. வெள்ளிப்பதக்கம் பெற்றது.
செஸ்
நார்வேயில், சர்வதேச செஸ்('கிளாசிக்கல்')தொடர் நடக்கிறது. பெண்கள் பிரிவு எட்டாவது சுற்றில் இந்தியாவின் ஹம்பி, ஸ்பெயின் சாராவை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி, போட்டியின் 58வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் வைஷாலி, சீனாவின் வென்சுன் மோதினர். இதில் 'டைபிரேக்க ரில் வைஷாலி, வெற்றி பெற்றார். 8 சுற்று முடிவில் ஹம்பி (13.5) முதலிடத்துக்கு முன்னேறினார். சீனா வின் வென்சுன் (12.5), உக்ரைனின் அனா முஜிசக் (12.0) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். வைஷாலி (9.5) 5வது இடத்தில் தொடர்கிறார்.
பாட்மிண்டன்
இந்தோனேஷியாவில் 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சதிஷ்குமார் கருணாகரன், ஆத்யா ஜோடி, தைவானின் நிக்கோல் சன், ஹாங் வெய் ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை 15,21 என இழந்த இந்திய ஜோடி, அடுத்த செட்டை 21,16 என கைப்பற்றியது. பின் நடந்த 3வது செட்டையும் இந்திய ஜோடி 21-17 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 15–21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் காயத்ரி, திரீஷா ஜோடி உக்ரைனின் புக்ரோவா, கான்ட்மெர் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 21-14, 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply