வெங்காயத்தை சுலபமாக உரிக்க....
சிறிதளவு வெல்லம்,நெய் உள்ளே போட்டு வைத்து விட்டால் நெய் சீக்கிரம் கெடாமல் இருக்கும்.
வெங்காயத்தை பிளாஸ்டிக் பைக்குள் போட்டு முதல் நாள் இரவே பிரிட்ஜில் வைத்து விடுங்கள். மறுநாள் காலை நறுக்கினால் கண்ணீர் வராது, தோலும் சுலபமாக உரிக்க வரும்.
குக்கரில் சாதம் செய்யும் போது அடியில் கட்டி கட்டியாக ஆகிவிடும். அதற்கு குக்கரிலிருந்து எடுத்து ஹாட் பேக்கில் வைத்து விட்டால் சர்தம் பொல பொலவென்று உதிரியாக இருக்கும்
கோதுமை மற்றும் அரிசியில் பூச்சி வராமல் இருக்க டப்பாவின் அடியில் வேப்ப இலை, கல் உப்பு சேர்த்து பொட்டலம் கட்டிப்போட்டு வையுங்கள். பூச்சிகள் அண்டாது.
பட்டாணியை முதல் நாள் ஊறப் போட மறந்து விட்டால், அவற்றை வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வறுத்து, பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்து விடும்.
0
Leave a Reply