அல்சர் பிரச்சனைக்கு .....
அல்சர் பிரச்சனைக்கு பழங்களை எடுத்து கொள்வதன் மூலம் மிக எளிதாக இந்த பிரச்சனையை சரிசெய்துவிட முடியும்.அஜீரணத்தை அலட்சியப்படுத்தும் போது அது வயிற்று புண்ணாக மாறி விடுகிறது. அதிக அளவில் காரம், மிளகாய் வத்தல் போன்றவற்றை எடுக்கும்போது குடலின் உட்பகுதிகளிலும் , வயிற்றின் உட்பகுதிகளில் உள்ள சளி படலத்தில் சில புண்கள் உருவாகும்.
அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஆப்பிள் சாப்பிடலாம். இந்த ஆப்பிளில் உள்ள ப்ளேவோனாய்டுகுள், பைலோரி பாக்டீரியாவில் வளர்ச்சியைத் தடுக்கும்.பொதுவாக நாம் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதினால் வயிற்று அல்சர் இருந்தாலும், அதை குணப்படுத்துவதோடு, அல்சர் வராமலும் தடுக்கும்.
மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் மற்றும் அல்சர் விரைவில் சரியாகும்.அகத்திக்கீரை சூப் செய்தும் குடிக்கலாம்.துளசி இலை சாற்றில் மாசிக்காயை, வயிற்றுப் புண் உள்ளவர்கள் குடித்தால் நல்ல குணம் பெறலாம்.
வயிற்று அல்சருக்கு மற்றொரு சிறப்பான தீர்வு நெல்லிக்காய். அதிலும் நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்துகலந்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.அதிக ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரந்த பழங்களில் ஒன்று தான் மாதுளை. பொதுவாக செரிமான பிரச்சனைக்கு இந்த மாதுளை பழம் மிகவும் சிறந்தது.
நாட்டு மருந்துக்கடைகளில் நன்னாரி வேர்(coleusroots) என்று கேட்டுவாங்குங்கள் பச்சைவேர்கிடைப்பது கஷ்டம் கிடைத்தால் வாங்கி கைப்பிடி அளவு எடுத்து சிறிது பசும்பால் விட்டு அரைத்து வெறும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட ஜெலுசிலுக்கு விடுதலை அல்சர் குணமாகும்.நன்னாரி வேர் காய்ந்திருந்தால் முன் இரவு தண்னீரில் ஊற வைத்து காலையில் பால் விட்டு அரைக்கவும்.
0
Leave a Reply