25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


விளையாட்டு (SPORTS)

Dec 16, 2025

மாயா ராஜேஸ்வரன் ரேவதி, செர்பியாவின் அனஸ்டா சியா சிவெட்கோவிச் ஜோடி, சாம்பியன்.

 பெண்களுக்கான போர்ட் லாடர் டேல் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர்  அமெரிக்காவின் புளோரிடாவில், (18 வயதுக்கு உட்பட்டோர்) ,இரட்டையர் பிரிவு பைனலில், 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் 16 வயது மாயா ரேவதி, செர்பியாவின் அனஸ்டா சியா சிவெட்கோவிச் ஜோடி, 'நம்பர்-5' அந்தஸ்து கொண்ட அமெரிக்காவின் தியா புரோடின், வெல்லஸ் நியூமன் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 3-6 ,2வது செட்டை 6-2 என கைப்பற்றியது. வெற்றியாளரை முடிவு செய்ய சூப்பர் டை பிரேக்கர்' நடந்தது.. முடிவில் மாயா ஜோடி 3-6, 6-2, 10-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை வென்றார்.அமெரிக்காவின் அனிதா டுவிடம் ,ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற மாயா, முதல் சுற்றில் 0-6, 3-6 என   தோல்வியடைந்தார்.சர்வதேச ஜூனியர் டென்னிஸ் தரவரிசையில் மாயா இரட்டையரில் கோப்பை வென்றதை அடுத்து,  38வது இடத்துக்கு முன்னேறினார்.15 வயதான தமிழக டென்னிஸ் வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி தற்போது சர்வதேச அளவிலான போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். டெல்லியில் நடைபெற்று வரும் ஐடிஎப் ஜே 300 டென்னிஸ் போட்டியில் மாயா தற்போது வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை வென்றார்.களத்தில் ஆக்ரோஷமாக ஷாட்களை விளையாடி எதிரணி வீராங்கனைகளை மாயா அபாரமாக வீழ்த்தி வருகிறார். கோவையில் பிறந்து வளர்ந்து தற்போது ஸ்பெயினில் உள்ள ரஃபேல் நடால், டென்னிஸ் அகாடமிவில் மாயா பயிற்சி செய்து வருகிறார்.

Dec 16, 2025

ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரி ல் ,ஜோஷ் டங் தேர்வு  இங்கிலாந்து அணி அறிவிப்பு

ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா சென்று உள்ள இங்கிலாந்து அணி, முதல் இரண்டு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் நாளை அடிலெய்டில் துவங்குகிறது. இப் போட்டிக்கான இங்கிலாந்து 'லெவன்'  அணி  அறிவிக்கப்பட்டது. முதலிரண்டு டெஸ்டில் பெரிய அளவில் சோபிக்காத (3 விக்கெட்) வேகப் பந்துவீச்சாளர் அட்கின் சன் 27, நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் 28,தேர்வானார்.

Dec 16, 2025

துப்பாக்கி சுடுதல் இந்திய ராணுவ அணி ஜூனியர் பெண்கள் அணிகள் பிரிவில் தங்கம் வென்றது.

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் டில்லியில், சீனியர் பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் திவ்யா (587 புள்ளி) முதலிடம் பிடித்தார். அடுத்த மூன்று இடங்களை அஞ்சலி சவுத்ரி (582), மனு பாகர் (581), ரிதம் சங்வான் (579) கைப்பற்றினர்.  மனு பாகர் அடுத்து நடந்த பைனலில் 36 புள்ளிகளுடன் தங்கத்தை  வென்றார். வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே திவ்யா (32 புள்ளி), அஞ்சலி (28) வென்றனர். ரிதம் சங்வான் 4வது இடம் பிடித்தார்.மகாராஷ்டிரா சீனியர் பெண்கள் அணிகள் பிரிவில் (25 மீ., 'பிஸ்டல்') தங்கம் வென்றது.சிம்ரன்பிரீத் கவுர் பிரார் ஜூனியர்பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு பைனலில் தங்கம் வென்றார். பிரனவி, பாலக் முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். இந்திய ராணுவ அணி ஜூனியர் பெண்கள் அணிகள் பிரிவில் (25 மீ., 'பிஸ்டல்') தங்கம் வென்றது. 

Dec 16, 2025

ஐ. சி. சி.விருதுக்கு இந்தியாவின் ஷைபாலி வர்மாநவம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனை.

 ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி.) சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படும்.சிறந்த வீராங்கனைக்கான கடந்த நவம்பர் மாதத்தின் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியலில் இந்தியாவின் ஷைபாலி வர்மா, யு.ஏ.இ., அணியின் ஈஷா ஓஜா, தாய்லாந்தின் திபாட்சா இடம் பெற்றனர்.சமீபத்திய உலக கோப்பை தொடரில், இந்தியாவின் பிரதிகா ராவல் காயத்தால் பாதியில் விலகினார். இவருக்கு மாற்றாக கள மிறங்கிய ஷைபாலி வர்மா, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான பைனலில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பை வெல்ல உதவினார். இவர், ஆட்ட நாயகி விருதையும் (87 ரன், 2 விக்கெட்) தட்டிச் சென்றார். சிறந்தவீரருக்கான விருதை தென் ஆப்ரிக்காவின் சைமன் ஹார்மர் வென்றார். 

Dec 15, 2025

ஹாங்காங்கை உலக ஸ்குவாஷ் கோப்பை பைனலில் வென்ற இந்திய அணி.

உலக கோப்பை ஸ்குவாஷ் 5வது சீசன் சென்னையில், லீக் சுற்றில் சுவிட்சர்லாந்து, பிரேசிலை வீழ்த்திய இந்தியா, காலிறுதியில் தென் ஆப்ரிக்கா, அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய எகிப்தை வென்றது.நேற்று நடந்த பைனலில் இந்திய அணி, ஹாங்காங்கை சந்தித்தது. முதல் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, ஹாங்காங்கின் கா யி லீ மோதினர். இதில்  ஜோஷ்னா 3-1 (7-3,2-7, 7-5, 7-1) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.இரண்டாவது போட்டியில் இந்தியாவின் அபே சிங் 3-0 (7-1, 7-4, 7-4)  என, ஹாங்காங்கின் டிஸ்குவான்லாவை தோற்கடித்தார்.மூன்றாவது போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங் 3-0 (7-2,7-2, 7-5) என ஹாங்காங்கின் ஹோ டொமாட்டோ டிஸ் லோக்கை வென்றார்.முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது

Dec 15, 2025

இந்திய அணி 3-0 என, மூன்றாவது 'T-20” கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 'டி-20' தொடரில் பங்கேற்க ,இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ,ஐந்து போட்டிகள் கொண்ட ,மூன்றாவது போட்டி இமயமலை தொடரின் தரம்சாலாவில் உள்ள, இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய கேப்டன் சூர்யகுமார்'டாஸ்' வென்று சாமர்த்தியமாக 'பவுலிங்' தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 117  ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி 15.5 ஓவரில் 120/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. இந்திய வெற்றியை மூவர்ணக் கொடியுடன்  ரசிகர்கள்கொண்டாடினர். 

Dec 15, 2025

அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022 'பிபா' உலக கோப்பை வென்றது. 'கோட் இந்தியா டூர் 2025' என்ற திட்டத்தின்படி, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.முதல் நாளில், கோல்கட்டாவில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத்நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன. இரண்டாம் நாளான நேற்று, ஐதராபாத்தில்மும்பை வந்தார் மெஸ்ஸி.விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தாஜ் ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பிரபோர்ன் மைதானத்தில், மாலை 4:00 மணியளவில் கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா (சி. சி.ஐ.,) 'கோட் கப்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். வான்கடே மைதானத்திற்கு வந்த மெஸ்ஸிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது..மாலை 5:00 மணிக்கு, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகமாக  வரவேற்றனர்., மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் , இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின்,உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.  

Dec 15, 2025

இந்தியாவின் உன்னதி ஹூடா, கிரண் ஜார்ஜ் ஒடிசா பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றனர்.

'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின் டன் தொடர் ஒடிசாமாநிலம் கட்டாக்கில்,  பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், இந்தியாவின் உன்னதி ஹூடா 18, இஷாராணி 21, மோதினர்.. 31 நிமிடம் நீடித்த போட்டியில் உன்னதி 21–17, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 25, இந்தோனேஷியாவின் முகமது யூசுப் 19,  ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் மோதினர்.  ஒரு மணி நேரம், 5 நிமிடம் நீடித்த போட்டியில் முதல் செட் 21-14 , , 2வது செட்டை 13-21 , 3வது செட்டில் எழுச்சி கண்ட கிரண், 21-16 ,எனக் கைப்பற்றி சாம்பியன் ஆனார். 

Dec 15, 2025

14 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற,அமெரிக்காவின் ஜான் சீனா டபிள்யு.டபிள்யு.இ., மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அமெரிக்காவை சேர்ந்த டபிள்யு. டபிள்யு.இ., மல்யுத்த வீரர் ஜான் சீனா 48. நடிகரான இவர், 1998ல் கலிபோர்னியாவில் மல்யுத்த பயிற்சி மேற்கொண்டார். பின், 1999ல் தொழில்முறையிலான மல்யுத்த போட்டியில் அறிமுகமானார். கடந்த 2002ல் முதன்முறையாக டபிள்யு.டபிள்யு.இ., போட்டியில் களமிறங்கிய ஜான் சீனா, 14 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். டபிள்யு. டபிள்யு.இ., ஜாம்பவான்களான அண்டர்டேக்கர், ராக், டிரிபிள் எச் உள்ளிட்டோருடன் மோதி யுள்ளார்.வாஷிங்டனில் நடந்த தனது கடைசி போட்டியில் பங்கேற்ற ஜான் சீனா, ஆஸ்திரியாவின் குந்தரை சந்தித்தார். 'டேப் அவுட்' முறையில் தோல்வியை தழுவினார்.இதனையடுத்து தனது 25 ஆண்டுகளுக்கு மேலான மல்யுத்த பயணத்தை தோல்வியுடன் நிறைவு செய்தார். போட்டி முடிந்த பின், தனக்கு ஆதரவு வழங்கிய ரசிகர்களுக்கும், சக வீரர்களுக்கும் நன்றி தெரிவித்தார். ரசிகர்கள் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

Dec 15, 2025

. பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்சில்  சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டிஇந்திய ஜோடி !

பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ்  சீனாவின் ஹாங்சு நகரில் வரும் 17-21ல் நடக்க உள்ளது. உலகின் 'நம்பர்-3' ஆக உள்ள இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, இதில் களமிறங்குகிறது.உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், ஹாங்காங், சீன மாஸ்டர்ஸ் தொடரில் 2வது இடம் பிடித்தது. தவிர, மலேசியா ஓபன், இந்தியன் ஓபன் உட்பட 5 தொடர்களில்அரையிறுதிக்குள் நுழைந்தது. 'குரூப் ஆப் டெத்' என்றழைக்கப்படும் 'பி' பிரிவில் , தற்போது வேர்ல்டு, டூர் பைனல்ஸ் தொடரில், இந்திய ஜோடி இடம் பெற்றுள்ளது. ஒலிம்பிக் பதக்கம் வென்ற, மலேசியாவின் ஆரோன்சியா, சோ இக் (2வது இடம்), சீனாவின் லியாங் வெய், வாங் சங் (6), இந்தோனேஷியாவின் பஜர் அல்பியான், சோகிபுல் பிக்ரி (8) என வலுவான ஜோடி, இந்திய ஜோடிக்கு சிக்கல் தரலாம். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 95 96

AD's



More News