25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Aug 25, 2026

உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு ஏமாற்றம்.

ஆண்கள் போட்டிபெல்ஜியத்தின் வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.ஆண்களுக்கான போட்டியில், அரையிறுதிக்கான இரண்டாவது சுற்றில் ‘இ’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, முதல் போட்டியில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது. இதையடுத்து நேற்று ஆம்ஸ்டல்வீனில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இந்திய அணி குறைந்தது 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. ஆனால், ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.இதனால் ‘இ’ பிரிவில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு முடிவுக்கு வந்தது.பெண்கள் போட்டிபெண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கியின் இரண்டாவது சுற்றில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி, அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. இதனால் இந்திய அணியின் அரையிறுதி கனவு தகர்ந்தது.உலகக் கோப்பையில் முதல் முறையாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்ததால், கோல் கீப்பர் சவிதா புனியா, பிச்சுதேவி உள்ளிட்ட வீராங்கனைகள் கண்ணீர் விட்டு அழுதனர்.

Aug 24, 2026

செஸ்: பிரக்ஞானந்தா போட்டி ‘டிரா’.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் ‘கிராண்ட் செஸ் டூர் பைனல்ஸ்’ தொடர் நடைபெற்று வருகிறது. அரையிறுதியின் முதல் சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சன்ட் கீமருடன் மோதினார்.இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா கறுப்பு காய்களுடன் விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டம் 80-வது நகர்த்தலில் ‘டிரா’வில் முடிந்தது.மற்றொரு அரையிறுதி முதல் சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லி சோ, பிரான்சின் அலிரெஸா ஃபிரோஜாவுடன் மோதினார். இந்த ஆட்டமும் 36-வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது.

Aug 24, 2026

உலகக் கோப்பை ஹாக்கி: அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இந்தியாவுக்கு வெற்றி அவசியம்.

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்திய அணி, அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது. அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க, இந்திய அணி அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.பெல்ஜியத்தின் வேவ்ரே மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் உலகக் கோப்பை ஹாக்கியின் 16-வது சீசன் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் ‘டி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, வேல்ஸ் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தியது. இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்தியா, தனது பிரிவில் 2-வது இடம் பிடித்தது.அரையிறுதிக்கான 2-வது சுற்றில் ‘இ’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, முதல் போட்டியில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி, இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் நெதர்லாந்து அணி 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்துக்கு இங்கிலாந்து, அர்ஜென்டினா மற்றும் இந்தியா அணிகள் போட்டியிடுகின்றன. இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா தலா 3 புள்ளிகளுடன் உள்ள நிலையில், இந்தியாவுக்கு இன்னும் புள்ளிகள் கிடைக்கவில்லை.இன்று ‘இ’ பிரிவில் நடைபெறும் போட்டிகளில் இந்தியா–அர்ஜென்டினா அணிகளும், நெதர்லாந்து–இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன. அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதுடன், மற்ற போட்டியின் முடிவும் சாதகமாக அமைய வேண்டும். அப்போதுதான் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு நீடிக்கும்.

Aug 24, 2026

உலக பாட்மிண்டன்  பெண்கள் பிரிவில் இந்திய ஜோடிக்கு வெண்கலம்.

30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்போட்டி டெல்லியில் நடந்து வந்தது.சொந்த மண்ணில் இந்த போட்டியில் இந்தியா சார்பில் 18 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்களில் பெண்கள் இரட்டையரில் திரிஷா ஜாலி - காயத்ரி கோபி சந்த் மட்டும் வெண்கலப்பதக்கம் வென்று ஆறுதல் அளித்தனர். எதிர்பார்க்கப்பட்ட பி.வி. சிந்து 3-வது சுற்றுடன் வெளியேறினார். நேற்று நடந்த பரிசளிப்பு விழாவில் பதக்கத்தை பெற் றுக் கொண்ட காயத்ரி கூறு கையில், 'இது எங்களுக்கு மிகச்சிறந்த வாரம். மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. வெண்கலம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பதக்கம் எங்களது வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத ஒன்றாக நிலைத்திருக்கும்' என்றார்.

Aug 22, 2026

உலக யூத் மல்யுத்தம்: இந்திய வீராங்கனை காஜலுக்கு தங்கம்.

சுலோவாக்கியாவில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களுக்கான 76 கிலோ பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் காஜல், சீனாவின் ஜிங்ரு சன்னை எதிர்கொண்டார்.தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய காஜல், 7-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். முன்னதாக அரையிறுதியில் அமெரிக்காவின் பைபரை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.கடந்த ஆண்டு நடைபெற்ற உலக யூத் மல்யுத்தப் போட்டியில் 72 கிலோ பிரிவிலும் காஜல் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Aug 22, 2026

உலக பாட்மின்டன்: அரையிறுதிக்கு காயத்ரி–திரீசா ஜோடி.

டெல்லியில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்–திரீசா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.காலிறுதியில் சீனாவின் ஜியாயிபேன்–ஷு ஜியான் ஜாங் ஜோடியை எதிர்கொண்ட இந்திய அணி, முதல் செட்டை 16-21 என இழந்தது. பின்னர் சிறப்பாக விளையாடிய காயத்ரி–திரீசா ஜோடி, இரண்டாவது செட்டை 21-15 எனக் கைப்பற்றியது.தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை 21-13 என வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உலக பாட்மின்டன் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியானது.

Aug 22, 2026

TNPL: கோவை அணிக்கு 4வது வெற்றி.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல். லீக் போட்டியில் கோவை மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின.டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த கோவை அணி, 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.இலக்கை துரத்திய திண்டுக்கல் அணி, 13.2 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கோவை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் தனது 4வது வெற்றியை பதிவு செய்தது.

Aug 22, 2026

தங்கம் வென்ற தமிழ்ப்பெண் கனக லட்சுமி .

நைஜீரியாவில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில், தமிழ்நாட்டின் வாழப்பாடியைச் சேர்ந்த கனக லட்சுமி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.ஒட்டுமொத்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, 13 தங்கம், 8 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்தது.

Aug 21, 2026

உலகக் கோப்பை ஹாக்கி.

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கான இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்று வரும் 16-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடரில், ‘டி’ பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. முதல் லீக் போட்டியில் சீனாவுடன் டிரா செய்த இந்தியா, அடுத்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.நேற்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 7-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தை எதிர்கொண்டது. இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி 0-0 என டிராவில் முடிந்தது.இதன் மூலம் அரையிறுதிக்கான இரண்டாவது சுற்று வாய்ப்பை இங்கிலாந்து இழந்தது.

Aug 21, 2026

சின்க்யுபீல்டு கோப்பை செஸ்,இந்திய வீரர் பிரக்ஞானந்தா 2-வது இடத்தைப் பிடித்தார்.

சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடரில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா 2-வது இடத்தைப் பிடித்தார்.கிராண்ட் செஸ் டூரின் 11-வது சீசனின் கடைசி தொடரான சின்க்யுபீல்டு கோப்பை, அமெரிக்காவின் செயின்ட் லூயிசில் நடைபெற்றது. நேற்று 9-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.இந்தியாவின் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் மோதினார். வெள்ளைக் காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 37-வது நகர்த்தலில் டிரா செய்தார். 9 சுற்றுகளின் முடிவில் அமெரிக்காவின் வெஸ்லி 5.5 புள்ளிகளுடனும், பிரக்ஞானந்தா 5 புள்ளிகளுடனும் முன்னிலை வகித்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 169 170

AD's