அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப் சார்பில் நடைபெறும் சர்வதேச ரேபிட் & பிளிட்ஸ் செஸ் தொடரில் இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.முதலில் நடைபெற்ற ரேபிட் பிரிவின் கடைசி மூன்று சுற்றுகள் நேற்று நடைபெற்றன. 9-வது சுற்றில் நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரீஸ்டை கருப்பு காய்களுடன் எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, 28 நகர்வுகளில் தோல்வியடைந்தார்.இருப்பினும், 9 சுற்றுகள் முடிவில் 4 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று ரேபிட் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தார்.
தென் கொரியாவில் நடைபெற்று வரும் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான தொடக்கத்தை பதிவு செய்தனர்.பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் தான்வி சர்மா, சீனாவின் ஆன் கி யுவானை 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப், ஹாங்காங்கின் சின் யான் ஹேப்பி லோவை 16-21, 21-17, 21-12 என்ற செட் கணக்கில் போராடி வென்றார்.மேலும் இந்தியாவின் ஸ்ரீயான்ஷியும் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறினார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டியில் சேப்பாக்கம் மற்றும் நெல்லை அணிகள் மோதின.டாஸ் வென்ற சேப்பாக்கம் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த நெல்லை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.205 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சேப்பாக்கம் அணி 17.2 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.மற்றொரு லீக் போட்டியில் மதுரை மற்றும் திருச்சி அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.முதலில் விளையாடிய திருச்சி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய மதுரை அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து, கடைசி கட்டத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் ஆகஸ்ட் 17 முதல் 23 வரை நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் வெளியிடப்பட்ட உலகத் தரவரிசை அடிப்படையில் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்திய அணியில் இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்து (2016 – வெள்ளி, 2021 – வெண்கலம்), லக்ஷ்யா சென், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி, தனிஷா கிராஸ்டோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.நேற்று போட்டிக்கான டிரா வெளியிடப்பட்டது. அதன்படி, பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் சிந்து, அயர்லாந்தின் சோபியா நோபிளை எதிர்கொள்கிறார். இந்தப் போட்டியில் சிந்து எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சுற்றில் சீனாவின் வாங் ஜி யியையும், காலிறுதியில் இந்தோனேஷியாவின் புத்ரி குசுமா வர்தானியையும் சந்திக்க வாய்ப்பு உள்ளது.இந்தியாவின் மற்றொரு வீராங்கனை உன்னதி ஹூடா, முதல் சுற்றில் மியான்மரின் தெட் ஹ்தார் துஜாரை எதிர்கொள்கிறார்.
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஆகஸ்ட் 17 முதல் 23 வரை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான தகுதி, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் வெளியிடப்பட்ட உலக தரவரிசையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.ஜூலை 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவரிசையின் அடிப்படையில் போட்டிக்கான சீடிங் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒலிம்பிக்கில் வெள்ளி (2016) மற்றும் வெண்கலப் பதக்கம் (2021) வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவில் 9வது சீட் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப் நடத்தும் சர்வதேச 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' செஸ் தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு முன்னிலை வகித்து வருகிறார்.இந்த தொடரில் இந்தியாவிலிருந்து பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தற்போது 'ரேபிட்' சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற 4, 5, 6வது சுற்றுகளில் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.5வது சுற்றில் அமெரிக்காவின் அவாண்டர் லியாங்-ஐ கருப்பு காய்களுடன் எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி, வெறும் 32 நகர்த்தல்களில் வெற்றியை பதிவு செய்தார்.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இலங்கையை சென்றடைந்துள்ளது.சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இலங்கை மண்ணில் நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலேவில் நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்புவில் நடைபெற உள்ளது.இந்த தொடருக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 7 முதல் 9 வரை கொழும்புவில் உள்ள என்.சி.சி. மைதானத்தில் நடைபெறும் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கை உள்ளூர் அணியை எதிர்கொள்கிறது.
உலக கோப்பை ஹாக்கியில் வரலாறு படைக்கும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. 51 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவுடன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை சுமந்தபடி போட்டியில் பங்கேற்கிறது.பெல்ஜியத்தின் வேவ்ரே மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் ஆகஸ்ட் 14 முதல் 30 வரை 16வது உலக கோப்பை ஹாக்கி தொடர் (ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு) நடைபெறுகிறது. ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 16 அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிந்து லீக் சுற்றில் மோதுகின்றன.'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஆம்ஸ்டல்வீனில் உள்ள வாகனர் மைதானத்தில் வேல்ஸ் அணியை எதிர்கொண்டு தனது உலகக் கோப்பை பயணத்தை தொடங்குகிறது.உலகக் கோப்பை கனவுடன் இந்திய பெண்கள் அணி.இந்திய பெண்கள் ஹாக்கி அணி, கேப்டன் சலிமா டேடே தலைமையில் முதல் முறையாக உலகக் கோப்பையை வெல்லும் நோக்குடன் களமிறங்குகிறது. 1974-ஆம் ஆண்டு பெற்ற 4வது இடமே இதுவரை இந்திய பெண்கள் அணியின் சிறந்த சாதனையாக உள்ளது.தொடருக்கு முன்பாக பேசிய கேப்டன் சலிமா டேடே, "உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி, நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே எங்களின் இலக்கு," என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கோலாகல நிறைவு விழாவுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்த உள்ள இந்தியாவிடம் காமன்வெல்த் கொடி அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 74 நாடுகளைச் சேர்ந்த 2,729 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பதக்கப் பட்டியலில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் 4-வது இடத்தைப் பிடித்தது. குறிப்பாக குத்துச்சண்டையில் 7 தங்கம் உள்பட 10 பதக்கங்களை வென்று இந்திய அணி சாதனை படைத்தது.இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற நிறைவு விழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின. 2030-ம் ஆண்டு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியை முன்னிறுத்தும் வகையில் இந்திய கலாசாரம், பாரம்பரியம் மற்றும் 'உலகம் ஒரே குடும்பம்' என்ற இந்திய தத்துவத்தை பிரதிபலிக்கும் இசை, நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.'வந்தே மாதரம்' பாடல் உருவாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடிகையும் முன்னாள் உலக அழகியுமான மனுஷி சில்லர் தலைமையில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் நடனமாடினர். இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் தனது மகன்கள் சித்தார்த், ஷிவத்துடன் இணைந்து பாடியதோடு, குஜராத் பாடகி பூமி திரிவேதியும் தனது குழுவினருடன் இசை நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
அமெரிக்காவின் யுஜின் நகரில் ஆகஸ்ட் 5 முதல் 9-ந் தேதி வரை நடைபெறும் உலக ஜூனியர் (20 வயதுக்கு உட்பட்டோர்) தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான 36 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 வீரர்-வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.தமிழகத்தைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள்:இவின் ஆனந்த் – 800 மீட்டர் ஓட்டம்ஜிதின் அர்ஜூனன் – நீளம் தாண்டுதல்நீல் சாம் ராஜ் – 400 மீட்டர் தொடர் ஓட்டம்ரஞ்சித் குமார் – 400 மீட்டர் தொடர் ஓட்டம்நகுல் பிரபு – 400 மீட்டர் தொடர் ஓட்டம்தரணிதரன் – ஈட்டி எறிதல்அம்ப்ரிஷ் – உயரம் தாண்டுதல்ராய் ஷன் – டிரிபிள் ஜம்ப்பவானா – 400 மீட்டர் தொடர் ஓட்டம்தியா – 400 மீட்டர் தொடர் ஓட்டம்இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 10 வீரர்-வீராங்கனைகள் இடம்பெற்றிருப்பது மாநில தடகளத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. உலக அரங்கில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வெல்வார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.