25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Jul 27, 2026

காமன்வெல்த்: மீராபாய்க்கு ஹாட்ரிக் தங்கம்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 48 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு மொத்தம் 190 கிலோ (85+105) பளுதூக்கி தங்கப்பதக்கத்தை வென்றார்.இதன்மூலம் காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கம் வென்று, மொத்தம் நான்காவது பதக்கத்தையும் கைப்பற்றினார்.ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரிஷிகாந்த் சிங் சனம்பம் மொத்தம் 264 கிலோ (121+143) பளுதூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

Jul 27, 2026

நீச்சல்: இந்திய அணி பைனலுக்கு முன்னேற்றம்.

ஆண்களுக்கான 4×200 மீட்டர் பிரீஸ்டைல் ரிலே தகுதிச் சுற்றில் ஸ்ரீஹரி நடராஜ், ஆர்யன் நெஹ்ரா, அனீஷ் கவுடா, தக்ஷன் சசிகுமார் அடங்கிய இந்திய அணி 7 நிமிடம் 39.48 வினாடிகளில் இலக்கை எட்டி, ஒட்டுமொத்தத்தில் 6-வது இடத்தைப் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Jul 27, 2026

ஜிம்னாஸ்டிக்ஸ்: புரோசிஸ்தா சமந்தா இறுதிச்சுற்றுக்கு தகுதி.

பெண்கள் அணிகளுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்திய அணி 123.000 புள்ளிகளுடன் 9-வது இடத்தைப் பிடித்தது.தனிநபர் வால்ட் பிரிவில் 13.025 புள்ளிகள் பெற்று 7-வது இடம் பிடித்த இந்திய வீராங்கனை புரோசிஸ்தா சமந்தா, இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தினார்.

Jul 27, 2026

டி-20 கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா 'ஒயிட்வாஷ்'

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, ஹராரேவில் நடைபெற்ற கடைசி போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தியது.முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்ததால், இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

Jul 27, 2026

ஆசிய யூத் ஹாக்கி: இந்திய ஆண்கள் அணி சாம்பியன்.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்ற ஆசிய யூத் ஐவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் யூத் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு தகுதி பெற்றன. வெற்றியை பாராட்டி இந்திய ஆண் வீரர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், பெண்கள் வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 லட்சமும் பரிசுத் தொகையாக ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.

Jul 27, 2026

ஸ்குவாஷ்: வரலாறு படைத்த அனாஹத் சிங்.

கனடாவில் நடைபெற்ற உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் ருகையா சலெமை 11-3, 11-7, 11-9 என்ற நேர் செட்களில் 3-0 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.இதன் மூலம் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை அனாஹத் சிங் படைத்துள்ளார்.

Jul 25, 2026

'பிடே' இடைக்கால தலைவராக விஸ்வநாதன் ஆனந்த்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பான ('பிடே') அமைப்பின் இடைக்கால தலைவராக இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பொறுப்பேற்றுள்ளார். இதன்மூலம், 'பிடே' அமைப்பின் தலைமை பொறுப்பை வகிக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.2018 முதல் 'பிடே' தலைவராக செயல்பட்டு வந்த ரஷ்யாவின் ஆர்காடி டிவோர்கோவிச்சுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து, இந்த பொறுப்பு ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐந்து முறை உலக சாம்பியனான ஆனந்த், 2022 முதல் 'பிடே' துணைத் தலைவராக இருந்து வந்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிவோர்கோவிச்சின் தலைமையையும் அர்ப்பணிப்பையும் மதிக்கிறேன். அவர் உருவாக்கிய வலுவான அணியுடன் இணைந்து உலகளவில் செஸ் விளையாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

Jul 25, 2026

உலக ஜூனியர் ஸ்குவாஷ்: அரையிறுதிக்கு அனாஹத் சிங்.

கனடாவில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனாஹத் சிங் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் எகிப்தின் ஹபிபா ரிஸ்கை எதிர்கொண்ட அனாஹத், 11-7, 11-5, 6-11, 11-9 என்ற செட் கணக்கில் 3-1 என்ற வெற்றியைப் பதிவு செய்தார்.இந்த வெற்றியின் மூலம், உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் (2025, 2026) அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அனாஹத் படைத்துள்ளார்.

Jul 25, 2026

காமன்வெல்த் போட்டி கோலாகல தொடக்கம்; இந்திய வீரர்கள் அணிவகுப்பு.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி வண்ணமயமான துவக்க விழாவுடன் தொடங்கியது. பசுமை சூழ்ந்த அரங்கில் இசை, நடனம், கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற விழாவில், இந்திய தேசியக் கொடியை மீராபாய் சானு மற்றும் லவ்லினா போர்கோஹைன் ஏந்தி அணிவகுத்தனர்.இந்தியாவிலிருந்து ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 123 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டியை பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.மாற்றுத் திறனாளிகளுக்கான பவர் லிப்டிங் போட்டியில் இங்கிலாந்தின் மார்க் ஸ்வான் 153.9 புள்ளிகளுடன் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். நைஜீரியாவின் ரோலண்ட் வெள்ளியும், மலேசியாவின் கஸ்டின் வெண்கலமும் வென்றனர்.பெண்கள் பிரிவில் இந்தியாவின் ஜஸ்பிரீத் கவுர் 'பி' பிரிவில் 100 கிலோ எடையை தூக்கி 96.4 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்தார். 'ஏ' பிரிவில் விளையாடிய சுமன் தேவி 100 கிலோ தூக்கி 88.4 புள்ளிகளுடன் 6வது இடத்தைப் பெற்றார். ஒட்டுமொத்த தரவரிசையில் ஜஸ்பிரீத் 6வது இடமும், சுமன் 7வது இடமும் பிடித்தனர்.இதேவேளை, நைஜீரியாவின் எஸ்தர் 123 கிலோ எடையை தூக்கி 119.0 புள்ளிகளுடன் புதிய காமன்வெல்த் சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

Jul 24, 2026

ஜிம்பாப்வே மீது இந்தியா அபார வெற்றி... தொடரில் 1-0 முன்னிலை!

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கியது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் இலக்கை விரட்டிய இந்தியா, 13.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 169 170

AD's



More News