25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Jul 18, 2026

விளையாட்டு போட்டிகள்.18th JULY.

 சென்னை செஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ் தொடரின் 2-வது சுற்றில் இந்தியாவின் குகேஷ், பிரான்சின் அலிரேசாவிடம் தோல்வியடைந்தார்.கோவாவில் நடைபெறும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் கொல்கத்தா அணி 9-6 என்ற கணக்கில் ஆமதாபாத் அணியை வென்றது.இத்தாலியில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் காலிறுதியில் இந்தியாவின் சுமித் நாகல், பெடெரிகோ போன்டியோலியிடம் 6-1, 5-7, 3-6 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.உஸ்பெகிஸ்தானில் செப்டம்பரில் நடைபெறவுள்ள FIDE விருதுகளுக்கு இந்தியா சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, திவ்யா தேஷ்முக், வைஷாலி, ஹம்பி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.இந்திய 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்வீடனைச் சேர்ந்த ஜோகிம் அலெக்சாண்டர்சன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வங்கதேசம் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது.

Jul 18, 2026

உலகக் கோப்பை பைனலுக்கு தயார் அர்ஜென்டினா.

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஜூலை 20-ஆம் தேதி நியூ ஜெர்சியில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 2-வது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ள அர்ஜென்டினா குறித்து, "இது அதிர்ஷ்டத்தால் கிடைத்த வெற்றி அல்ல. உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக நாங்கள் நிரூபித்துள்ளோம்" என்று கேப்டன் லியோனல் மெஸ்ஸி தெரிவித்தார். இதற்கிடையில், நடுவர்கள் மற்றும் VAR தொழில்நுட்பம் அர்ஜென்டினாவுக்கு சாதகமாக செயல்படுவதாக சில தரப்பினர் விமர்சனம் முன்வைத்துள்ளனர்.

Jul 17, 2026

ஜப்பான் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய சிந்து.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 'சூப்பர் 750' ஜப்பான் ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் பி.வி. சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள சிந்து, சீனாவின் ஹான் யூவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அவர், முதல் செட்டை 21-16 என்றும், இரண்டாவது செட்டை 21-14 என்றும் கைப்பற்றி, 35 நிமிடங்களில் நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.இதேவேளை, கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா – தனிஷா கிராஸ்டோ ஜோடி, சீனாவின் யான் ஜீ பெங் – டங் பிங் ஹுவாங் இணையை எதிர்கொண்டு 20-22, 17-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

Jul 17, 2026

உலக கோப்பை கால்பந்து பைனலில் அர்ஜென்டினா.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள மெர்சிடஸ்-பென்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதியில், அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் முன்னேறியது. இந்த ஆட்டத்தை 68,239 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.இதனுடன், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்களுக்கு பங்களித்த வீரர்களின் பட்டியலில் லியோனல் மெஸ்ஸி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவர் 33 போட்டிகளில் 21 கோல்கள் மற்றும் 12 அசிஸ்ட்கள் என மொத்தம் 33 கோல்களுக்கு பங்களித்துள்ளார். இரண்டாவது இடத்தில் பிரான்சின் கைலியன் எம்பாப்பே 20 கோல்கள், 5 அசிஸ்ட்களுடன் உள்ளார்.

Jul 17, 2026

இந்தியா–இலங்கை இளையோர் டெஸ்ட் சமநிலையில் முடிவு.

இலங்கையின் காலேவில் நடைபெற்ற இந்தியா–இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையேயான முதல் யூத் டெஸ்ட் போட்டி டிராவில் நிறைவடைந்தது.முதலில் விளையாடிய இலங்கை அணி 424/9 ரன்களில் டிக்ளேர் செய்தது. பதிலுக்கு இந்திய அணி லக்சயா ராய்சந்தனி இரட்டைச் சதம் மற்றும் மானவ் கிருஷ்ணாவின் சதம் உதவியுடன் முதல் இன்னிங்சில் 576 ரன்கள் குவித்தது. லக்சயா 207 ரன்கள் விளாசி அணியின் முன்னிலை பெற முக்கிய பங்காற்றினார்.பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 178/6 ரன்களில் டிக்ளேர் செய்தது. அதன்பின் ஆட்ட நேரம் முடிவடைந்ததால் முதல் யூத் டெஸ்ட் போட்டி டிராவாக அறிவிக்கப்பட்டது.

Jul 16, 2026

விளையாட்டு செய்திகள்.JULY 16 th 2026

ஸ்குவாஷ்:சென்னையில் நடைபெற்ற சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் மலேசியாவின் ஜோகிம் சுவா, எகிப்தின் அதாம் ரோஷ்டியை 12-10, 11-7, 11-8 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் எகிப்தின் ரூகையா, தென் கொரியாவின் ஹவாயோங் இயம்மை 11-6, 10-12, 19-21, 11-7, 11-8 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றினார்.பாட்மின்டன்:அனைத்து இந்திய சீனியர் ரேங்கிங் பாட்மின்டன் தொடர் இன்று சென்னைில் தொடங்குகிறது. 2021க்குப் பிறகு இந்தப் போட்டி மீண்டும் சென்னைில் நடைபெறுகிறது. தொடரின் இறுதிப்போட்டி ஜூலை 23-ம் தேதி நடைபெற உள்ளது.டி-20 கிரிக்கெட்:புலவாயோவில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 170/6 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய வங்கதேசம் 19 ஓவரில் 138 ரன்களுக்கு சுருண்டதால், ஜிம்பாப்வே 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஜூனியர் ஹாக்கி:செப்டம்பர் 4 முதல் 13 வரை சீனாவில் நடைபெறும் பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்கான தயாரிப்பில் இந்திய அணி இங்கிலாந்தில் 7 பயிற்சி போட்டிகளில் விளையாடியது. இதில் 3 வெற்றியும், 4 தோல்வியும் பதிவு செய்தது.

Jul 16, 2026

அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய பெண்கள்.

தாய்லாந்தில் நடைபெற்று வரும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை 'டிவிஷன்-பி' மகளிர் கூடைப்பந்து தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.'ஏ' பிரிவில் இடம்பெற்ற இந்தியா, லெபனான் மற்றும் கஜகஸ்தானை வீழ்த்திய நிலையில், தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்தோனேஷியாவை சந்தித்தது. முதல் பாதி முடிவில் 33-26 என முன்னிலை வகித்த இந்திய அணி, இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்தி 79-46 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.இதன் மூலம், லீக் சுற்றில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா, நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Jul 16, 2026

லக்சயா இரட்டை சதம் நெருங்கினார்.

இலங்கையில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான முதல் 'யூத்' டெஸ்டில் இந்திய அணி வலுவான பதிலடி கொடுத்தது.முதல் இன்னிங்சில் இலங்கை 424/9 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் லக்சயா ராய்சந்தனி மற்றும் சாகர் விர்க் சிறப்பான தொடக்கம் அமைத்தனர்.இருவரும் முதல் விக்கெட்டுக்கு 295 ரன் சேர்த்த நிலையில், சாகர் விர்க் 134 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் குஷாக்ரா ஓஜா (24), கேப்டன் யாஷ்பர்தன் சவுகான் (6) விரைவில் வெளியேறினர். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய லக்சயா, 196 ரன்களுடன் களத்தில் நீடித்து இரட்டை சதத்தை நெருங்கினார்.3-வது நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 378/3 ரன் எடுத்து, இலங்கையை விட 46 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. லக்சயா (196), குஷ் படேல் (3) ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் முழுமையாக முடிவடைய வாய்ப்பு குறைவாக இருப்பதால், போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jul 15, 2026

சுமித் நாகல் அசத்தல் வெற்றி; 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.

இத்தாலியில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் சுமித் நாகல் ருமேனியாவின் சீசர் கிரெட்டுவை எதிர்கொண்டார்.ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய நாகல், முதல் செட்டை 6-2 எனவும், இரண்டாவது செட்டை 6-4 எனவும் கைப்பற்றி, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இந்த வெற்றியின் மூலம் அவர் ரவுண்டு-16 சுற்றுக்கு முன்னேறினார்.

Jul 15, 2026

ஜப்பான் ஓபனில் சிந்து வெற்றி; காயத்தால் விலகிய சாத்விக்-சிராக் ஜோடி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் சூப்பர்-750 பாட்மின்டன் தொடரில், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெற்றியுடன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மலேசியாவின் லிங் சிங் வோங்வை எதிர்கொண்ட சிந்து, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 21-14, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.மறுபுறம், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, டென்மார்க்கின் டேனியல் லங்கார்ட் - மட்ஸ் வெஸ்டர்கார்ட் ஜோடியுடன் மோதியது. முதல் செட்டை 19-21 என்ற கணக்கில் இழந்த நிலையில், சாத்விக்சாய்ராஜுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய ஜோடி போட்டியிலிருந்து விலகியது. இதனால் டென்மார்க் ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

1 2 ... 9 10 11 12 13 14 15 ... 169 170

AD's



More News