25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Jul 16, 2026

லக்சயா இரட்டை சதம் நெருங்கினார்.

இலங்கையில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான முதல் 'யூத்' டெஸ்டில் இந்திய அணி வலுவான பதிலடி கொடுத்தது.முதல் இன்னிங்சில் இலங்கை 424/9 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் லக்சயா ராய்சந்தனி மற்றும் சாகர் விர்க் சிறப்பான தொடக்கம் அமைத்தனர்.இருவரும் முதல் விக்கெட்டுக்கு 295 ரன் சேர்த்த நிலையில், சாகர் விர்க் 134 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் குஷாக்ரா ஓஜா (24), கேப்டன் யாஷ்பர்தன் சவுகான் (6) விரைவில் வெளியேறினர். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய லக்சயா, 196 ரன்களுடன் களத்தில் நீடித்து இரட்டை சதத்தை நெருங்கினார்.3-வது நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 378/3 ரன் எடுத்து, இலங்கையை விட 46 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. லக்சயா (196), குஷ் படேல் (3) ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் முழுமையாக முடிவடைய வாய்ப்பு குறைவாக இருப்பதால், போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jul 15, 2026

சுமித் நாகல் அசத்தல் வெற்றி; 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.

இத்தாலியில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் சுமித் நாகல் ருமேனியாவின் சீசர் கிரெட்டுவை எதிர்கொண்டார்.ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய நாகல், முதல் செட்டை 6-2 எனவும், இரண்டாவது செட்டை 6-4 எனவும் கைப்பற்றி, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இந்த வெற்றியின் மூலம் அவர் ரவுண்டு-16 சுற்றுக்கு முன்னேறினார்.

Jul 15, 2026

ஜப்பான் ஓபனில் சிந்து வெற்றி; காயத்தால் விலகிய சாத்விக்-சிராக் ஜோடி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் சூப்பர்-750 பாட்மின்டன் தொடரில், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெற்றியுடன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மலேசியாவின் லிங் சிங் வோங்வை எதிர்கொண்ட சிந்து, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 21-14, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.மறுபுறம், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, டென்மார்க்கின் டேனியல் லங்கார்ட் - மட்ஸ் வெஸ்டர்கார்ட் ஜோடியுடன் மோதியது. முதல் செட்டை 19-21 என்ற கணக்கில் இழந்த நிலையில், சாத்விக்சாய்ராஜுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய ஜோடி போட்டியிலிருந்து விலகியது. இதனால் டென்மார்க் ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Jul 14, 2026

டேபிள் டென்னிஸில் இந்திய ஜோடிக்கு 2வது இடம்.

சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு (ஐ.டி.டி.எப்.) வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில், இந்தியாவின் மானவ் தாக்கர்–மானுஷ் ஷா ஜோடி ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஜோடி 3,390 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறியுள்ளது.பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தியா–யாஷஸ்வினி ஜோடி 10வது இடத்துக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவில் தியா–மானுஷ் ஷா ஜோடி 5வது இடத்தை பிடித்துள்ளது. ஹர்மீத் தேசாய்–யாஷஸ்வினி ஜோடி 14வது இடத்தில் தொடர்கிறது.

Jul 14, 2026

லார்ட்ஸில் இந்திய பெண்கள் வரலாற்று வெற்றி.

லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் பெண்கள் டெஸ்ட் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 270 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது.முதல் இன்னிங்சில் இந்தியா 285 ரன்களும், இங்கிலாந்து 170 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து, யஸ்திகா பாட்யா 113 ரன்கள் குவித்ததன் உதவியுடன் இந்தியா 2வது இன்னிங்சில் 341/7 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 457 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து, 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் இந்திய பெண்கள் அணி 3வது முறையாக டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. அங்கு விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 3 வெற்றிகளையும், 8 டிராக்களையும் பெற்றுள்ளது.

Jul 14, 2026

ஏ.டி.பி. தரவரிசை: சின்னர் மீண்டும் முதலிடம்.

ஆண்கள் ஒற்றையர் ஏ.டி.பி. தரவரிசையில் இத்தாலியின் ஜானிக் சின்னர் மீண்டும் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் தொடரில் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அவரது முன்னிலையை உறுதிப்படுத்தியது.விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 3வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறினார்.பெண்கள் டபிள்யூ.டி.ஏ. ஒற்றையர் தரவரிசையில், விம்பிள்டன் சாம்பியனான செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 12வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு முன்னேறினார். அதே தொடரில் இறுதிப்போட்டிக்கு சென்ற கரோலினா முசோவா 3 இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்தார்.

Jul 13, 2026

லார்ட்ஸ் டெஸ்ட்: யஸ்திகா சதம்... இந்தியா ஆதிக்கம்

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய பெண்கள் அணி முழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.முதல் இன்னிங்சில் இந்தியா 285 ரன்களும், இங்கிலாந்து 170 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து 2வது இன்னிங்சில் இந்தியா 341/7 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. யஸ்திகா பாட்யா அபாரமாக சதம் விளாச, இந்தியா மொத்தமாக 456 ரன்கள் முன்னிலை பெற்றது.457 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, தேநீர் இடைவேளையின்போது 47/4 ரன்கள் எடுத்து தடுமாறியது.

Jul 13, 2026

ஆசிய தடகளம்: ஆனந்த் சிங்குக்கு தங்கம்.

சீனாவில் நடந்த 23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில், ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஆனந்த் சிங் 80.57 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.மற்றொரு இந்திய வீரர் ஷிவம் சதிஷ் 79.41 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.பெண்கள் 4×400 மீட்டர் ரிலேவில் ஷ்ரவாணி, சந்திரமோல், பிரவல்லிகா, நோவிசா ஆகியோர் இடம் பெற்ற இந்திய அணி 3:33.62 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கம் வென்றது.இத்தொடரில் இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை கைப்பற்றியது.

Jul 13, 2026

உலகக் கோப்பைகால்பந்து : இங்கிலாந்து அரையிறுதியில்…

உலகக் கோப்பை கால்பந்து காலிறுதியில், நார்வே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்தது.அமெரிக்காவின் மயாமியில் நடந்த போட்டியில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து வெற்றிக்கான கோலை அடித்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தது.அர்ஜென்டினா அபாரம்... அரையிறுதிக்கு முன்னேற்றம்.உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதியில் சுவிட்சர்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேறியது.அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டியில் நடைபெற்ற தொடரின் 100வது போட்டியில், 10வது நிமிடத்தில் மெஸ்ஸியின் கார்னரை அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் தலையால் முட்டி கோலாக மாற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அர்ஜென்டினா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை கைப்பற்றியது.

Jul 11, 2026

விம்பிள்டனில் முதல் முறையாக பைனலுக்கு ஸ்வெரேவ்.

இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்குள் முன்னேறினார்.பிரிட்டனின் ஆர்தர் பெரியை எதிர்கொண்ட ஸ்வெரேவ், முதல் செட்டை டைபிரேக்கரில் 7-6 என கைப்பற்றினார். அதன்பின் ஆதிக்கம் செலுத்திய அவர், அடுத்த இரண்டு செட்களையும் 6-2, 6-4 என வென்று போட்டியை நேர் செட்களில் முடித்தார்.2 மணி 14 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-6, 6-2, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஸ்வெரேவ், தனது விம்பிள்டன் வரலாற்றில் முதல் முறையாக ஒற்றையர் பிரிவு பைனலுக்கு தகுதி பெற்றார்.

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 170 171

AD's



More News