இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இவா ஜோவிச்சை எதிர்கொண்டார்.முதல் செட்டை 4-6 என இழந்த பெகுலா, அதன்பின் அபாரமாக மீண்டு 6-3, 6-1 என்ற கணக்கில் அடுத்த இரு செட்களையும் கைப்பற்றி, 4-6, 6-3, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் முன்னேறினார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷ்யாவின் ரோமன் சபியுலினை 7-6, 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.இந்த வெற்றியின் மூலம் விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் என்ற புதிய சாதனையையும் ஜோகோவிச் படைத்தார். இதற்கு முன் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 105 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், ஜோகோவிச் தனது 106-வது வெற்றியை பதிவு செய்து அந்த சாதனையை முறியடித்தார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இலங்கை 'ஏ' அணியை எதிர்கொண்டது. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், காலேவில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா 'ஏ' அணி ஆதிக்கம் செலுத்தியது.முதல் இன்னிங்சில் இலங்கை 'ஏ' அணி 366 ரன்கள் எடுத்தது. அதற்கு பதிலளித்த இந்தியா 'ஏ' அணி 9 விக்கெட் இழப்புக்கு 543 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.2-வது இன்னிங்சில் இலங்கை 'ஏ' அணி 209 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் ஆஷேன் பண்டாரா 87 ரன்கள் எடுத்தார். இந்தியா 'ஏ' அணியின் குர்னூர் பிரார் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.வெற்றிக்கு 33 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சாய் சுதர்சன் (25*), அமன் மொகதே (11*) ஆகியோர் சிறப்பாக விளையாட, இந்தியா 'ஏ' அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரையும் இந்தியா 'ஏ' அணி கைப்பற்றியது.
23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 2-வது சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணி, ஆஸ்திரியாவை எதிர்கொண்டது.ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின், 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று ரவுண்ட்-16 (3-வது சுற்று) போட்டிக்குத் தகுதி பெற்றது.இதேபோல், வான்கூவர் நகரில் நடைபெற்ற மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி, அல்ஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.13-வது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள சுவிட்சர்லாந்து, 88 ஆண்டுகளுக்குப் பிறகு நாக்-அவுட் சுற்றில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 1938 உலகக் கோப்பையில்தான் அந்த அணி நாக்-அவுட் சுற்றில் வெற்றி கண்டிருந்தது.
லண்டனில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், முன்னாள் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தனது ஆதிக்கத்தை தொடர்கிறார்.ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில், பிரான்சின் ஆர்தர் ரின்டர்க்னெச்சை 7-5, 6-4, 1-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வீழ்த்திய ஜோகோவிச், 4-வது சுற்றுக்குத் தகுதி பெற்றார். இது விம்பிள்டனில் அவர் பதிவு செய்த 105-வது வெற்றியாகும்.இதன் மூலம், விம்பிள்டனில் அதிக வெற்றிகள் பெற்ற வீரர் என்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.மற்றொரு ஆட்டத்தில், உலகின் நம்பர்-1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் ஜென்சனை 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 4-வது சுற்றை எட்டினார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில், முதல்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா, லாத்வியாவின் ஒஸ்டாபென்கோவை 6-4, 6-4 என்ற கணக்கில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 10-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதியில், இங்கிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, கேப்டன் நாட் சிவெர் (75), ஹீதர் நைட் (58) ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் வலுவான இலக்கை நிர்ணயித்தது. பதிலளித்த தென் ஆப்பிரிக்கா, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்ததால் தோல்வியைத் தழுவியது.இதன் மூலம் 5-வது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து, நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.அமெரிக்காவின் மடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா ஆகியோரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.ஆண்கள் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கிரீசின் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸை 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார்.
குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் நடைபெற்று வரும் சூப்பர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடரின் ரேபிட் பிரிவில், இந்தியாவின் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.முதல் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்திய அவர், அடுத்த இரண்டு சுற்றுகளில் மேக்சிம் வாச்சியர்-லாக்ரேவ் மற்றும் உலக சாம்பியன் குகேஷுடன் டிரா செய்தார்.மூன்று சுற்றுகள் முடிவில் அலிரெசா ஃபிரூஜா 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா 4 புள்ளிகளுடன் மேலும் மூன்று வீரர்களுடன் இணைந்து 2-வது இடத்தைப் பகிர்ந்து வருகிறார்.
மும்பையில் நடைபெற்று வரும் பி.எஸ்.ஏ. சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், எகிப்தின் அப்துல்லா ஹபீஸை 15-13, 11-4, 11-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் அவர் எகிப்தின் யாசின் ஷோடியை சந்திக்கிறார்.பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் தன்வி கண்ணா, ஜப்பானின் ஜோ போவை 11-6, 11-7, 8-11, 11-6 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அரையிறுதியை எட்டினார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஷமீனா ரியாஸ், ஜப்பானின் அகாரி மிடோரிகவாவிடம் 10-12, 8-11, 11-5, 2-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
இங்கிலாந்தின் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில், பெலாரசின் அரினா சபலென்கா 6-1, 7-6 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் மெக்கார்ட்னி கெஸ்லரை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 6-2 என ரஷ்யாவின் அனஸ்டாசியா கசானோவாவை தோற்கடித்தார். ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டாமி பால் ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.
உலக கோப்பை கால்பந்து 'ரவுண்டு-32' போட்டியில் பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறியது.