25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Jul 03, 2026

குரோஷியா செஸ்: பிரக்ஞானந்தா 2-வது இடத்தில்.

குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் நடைபெற்று வரும் சூப்பர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடரின் ரேபிட் பிரிவில், இந்தியாவின் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.முதல் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்திய அவர், அடுத்த இரண்டு சுற்றுகளில் மேக்சிம் வாச்சியர்-லாக்ரேவ் மற்றும் உலக சாம்பியன் குகேஷுடன் டிரா செய்தார்.மூன்று சுற்றுகள் முடிவில் அலிரெசா ஃபிரூஜா 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா 4 புள்ளிகளுடன் மேலும் மூன்று வீரர்களுடன் இணைந்து 2-வது இடத்தைப் பகிர்ந்து வருகிறார்.

Jul 03, 2026

சேலஞ்சர் ஸ்குவாஷ்: அரையிறுதிக்கு முன்னேறிய செந்தில்குமார்.

மும்பையில் நடைபெற்று வரும் பி.எஸ்.ஏ. சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், எகிப்தின் அப்துல்லா ஹபீஸை 15-13, 11-4, 11-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் அவர் எகிப்தின் யாசின் ஷோடியை சந்திக்கிறார்.பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் தன்வி கண்ணா, ஜப்பானின் ஜோ போவை 11-6, 11-7, 8-11, 11-6 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அரையிறுதியை எட்டினார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஷமீனா ரியாஸ், ஜப்பானின் அகாரி மிடோரிகவாவிடம் 10-12, 8-11, 11-5, 2-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

Jul 02, 2026

விம்பிள்டன் டென்னிஸ்

இங்கிலாந்தின் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில், பெலாரசின் அரினா சபலென்கா 6-1, 7-6 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் மெக்கார்ட்னி கெஸ்லரை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 6-2 என ரஷ்யாவின் அனஸ்டாசியா கசானோவாவை தோற்கடித்தார். ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டாமி பால் ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.

Jul 02, 2026

உலக கோப்பை கால்பந்து.

உலக கோப்பை கால்பந்து 'ரவுண்டு-32' போட்டியில் பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறியது.

Jul 02, 2026

உலக கோப்பை 'ரவுண்டு-32' போட்டியில் மெக்சிகோ அணி வெற்றி.

மெக்சிகோ சிட்டியில் நடந்த உலக கோப்பை 'ரவுண்டு-32' போட்டியில் மெக்சிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியை 80,824 ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர்.

Jul 01, 2026

சர்வதேச பாரா பாட்மின்டன்: தமிழக வீராங்கனைகள் துளசிமதி, நித்யஸ்ரீ ‘தங்கம்’ வென்று சாதனை

அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் சர்வதேச பாரா பாட்மின்டன் தொடரில், தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.ஒற்றையர் பிரிவில் அசத்தல்துளசிமதிக்கு தங்கம்: பெண்கள் ஒற்றையர் எஸ்.யு.5 (SU5) பிரிவின் இறுதிப்போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி சக இந்திய வீராங்கனையான மனிஷாவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய துளசிமதி 21-12, 21-19 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.நித்யஸ்ரீக்கு தங்கம்: இதேபோல் பெண்கள் ஒற்றையர் எஸ்.எச்.6 (SH6) பிரிவின் இறுதிப்போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த நித்யஸ்ரீ 21-12, 21-12 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் ஆலிவியாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.இரட்டையர் பிரிவில் பதக்கங்கள்வெள்ளிப் பதக்கம்: பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் துளசிமதி - மானஷி ஜோடி 14–21, 21-13, 17-21 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஆக்டிலா - சாடியா ஜோடியிடம் போராடித் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றது.வெண்கலப் பதக்கம்: கலப்பு இரட்டையர் பிரிவில் துளசிமதி - நிதேஷ் குமார் ஜோடி வெண்கலப் பதக்கத்தை தன்வசப்படுத்தியது.இந்தத் தொடரில் ஒற்றை ஆளாக தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று துளசிமதி சாதனை படைத்துள்ளார்.

Jul 01, 2026

மகளிர் டி-20 உலகக் கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் பெண்களுக்கான 10-வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று 'தி ஓவல்' மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.வெஸ்ட் இண்டீஸ்: முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.ஆஸ்திரேலியா: 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீராங்கனை பேத் மூனே (61 ரன்கள்) அரைசதம் அடித்து அதிரடி துவக்கம் தந்தார்.முடிவு: ஆஸ்திரேலிய அணி 13 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், கம்பீரமாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

Jul 01, 2026

விம்பிள்டன் டென்னிஸ்: கடினமாகப் போராடி 2-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் உலகப் புகழ்பெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில், உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச், தரவரிசையில் 108-வது இடத்தில் உள்ள சீனாவின் யு இபிங் (Wu Yibing) உடன் மோதினார்.ஆட்டத்தின் போக்கு: போட்டியின் முதல் செட்டை 6-4 என ஜோகோவிச் எளிதாகக் கைப்பற்றினார். ஆனால், இரண்டாவது செட்டில் யு இபிங் அசாத்தியமாக விளையாடி 5-7 என ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சியளித்தார்.மீண்டெழுந்த ஜோகோவிச்: ஒரு செட்டை இழந்த பின் சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்த இரு செட்டுகளையும் 6-4, 6-4 எனக் கைப்பற்றி அசத்தினார்.முடிவு: சுமார் 3 மணி நேரம் 17 நிமிடங்கள் விறுவிறுப்பாக நீடித்த இந்த ஆட்டத்தின் இறுதியில், ஜோகோவிச் 6-4, 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கடினமாகப் போராடி வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் இளம் வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவா, போலந்தின் மாக்டா லினெட்டேவை எதிர்கொண்டார்.ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மிர்ரா ஆன்ட்ரீவா 7-5, 6-4 என்ற நேர் செட்களில் மாக்டாவை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு வெற்றிகரமாக முன்னேறினார்.

Jul 01, 2026

ஆசிய விளையாட்டு: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தமிழக வீராங்கனை கமலினி தேர்வு.

ஜப்பானில் வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. (மகளிர் கிரிக்கெட் போட்டிகள் செப். 17-22 தேதிகளில் நடைபெறுகின்றன).கேப்டன்: டி-20 உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் இந்தியா வெளியேறிய போதிலும், ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக நீடிக்கிறார்.கமலினிக்கு வாய்ப்பு: உலகக் கோப்பை தொடரில் சொதப்பிய விக்கெட் கீப்பர் யஸ்திகாவிற்குப் பதிலாக, தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது இளம் வீராங்கனை கமலினி மாற்று விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷைபாலி, ஜெமிமா, தீப்தி, ரிச்சா, கமலினி, பார்தி, ஸ்ரீ சரனி, ரேணுகா, கிராந்தி, அருந்ததி, ஷ்ரேயாங்கா, ராதா, நந்தனி.

Jun 30, 2026

வெள்ளி பதக்கத்துடன் திரும்பிய ஸ்ரீகாந்த்.

அமெரிக்காவில் நடைபெற்ற 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற யு.எஸ். ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் ரன்னர்-அப் பட்டம் வென்றார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 38-வது இடத்தில் உள்ள 33 வயதான ஸ்ரீகாந்த், சீன தைபேயின் சு லியாங்கை எதிர்கொண்டார்.முதல் செட்டை 15-21 என இழந்த ஸ்ரீகாந்த், இரண்டாவது செட்டில் 21-16 என வென்று சமநிலையை ஏற்படுத்தினார். ஆனால் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் 9-21 என போராடி தோல்வியடைந்தார்.ஒரு மணி நேரம் ஒரு நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் 15-21, 21-16, 9-21 என்ற செட் கணக்கில் தோற்ற ஸ்ரீகாந்த், வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

1 2 ... 14 15 16 17 18 19 20 ... 170 171

AD's



More News