25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆசிய விளையாட்டு: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தமிழக வீராங்கனை கமலினி தேர்வு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய விளையாட்டு: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தமிழக வீராங்கனை கமலினி தேர்வு.

ஜப்பானில் வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. (மகளிர் கிரிக்கெட் போட்டிகள் செப். 17-22 தேதிகளில் நடைபெறுகின்றன).

கேப்டன்: டி-20 உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் இந்தியா வெளியேறிய போதிலும், ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக நீடிக்கிறார்.

கமலினிக்கு வாய்ப்பு: உலகக் கோப்பை தொடரில் சொதப்பிய விக்கெட் கீப்பர் யஸ்திகாவிற்குப் பதிலாக, தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது இளம் வீராங்கனை கமலினி மாற்று விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷைபாலி, ஜெமிமா, தீப்தி, ரிச்சா, கமலினி, பார்தி, ஸ்ரீ சரனி, ரேணுகா, கிராந்தி, அருந்ததி, ஷ்ரேயாங்கா, ராதா, நந்தனி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News