துபாய், ஜூன் 24 – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட பெண்கள் டி20 பவுலர்களுக்கான தரவரிசையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரனி 753 புள்ளிகளுடன் முதல்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார்.தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் கூடுதலாக 25 ரேட்டிங் புள்ளிகள் பெற்ற அவர், இங்கிலாந்தின் சோபி எக்லஸ்டோன் (726) மற்றும் சார்லி டீன் (733) ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை எட்டினார்.
இத்தாலியில் நடைபெறும் உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப்பில், 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவின் கவுதம் கிருஷ்ணா 6 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.டெல்லியில் நடைபெறும் ஆசிய சீனியர் பென்சிங் சாம்பியன்ஷிப்பில், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பிரிவில் கஜகஸ்தான் தங்கப்பதக்கங்களை வென்றது.பெண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில், நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை தோற்கடித்தது.ஹாக்கி புரோ லீக் தொடரில் இந்திய அணி, 4-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
விளையாட்டு வீரர் தனது திறமையால் மட்டுமல்லாமல், தனது பெயரையே ஒரு உலகப் பிராண்டாக மாற்ற முடியுமா? அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு மைக்கேல் ஜோர்டான்.1984-ஆம் ஆண்டு நைக் நிறுவனத்துடன் தொடங்கிய அவரது கூட்டணி, பின்னர் 'ஏர் ஜோர்டான்' என்ற தனித்துவமான பிராண்டாக வளர்ந்தது. ஆரம்பத்தில் ஒரு சாதாரண விளம்பர ஒப்பந்தமாக இருந்த இது, இன்று உலகம் முழுவதும் அறியப்படும் வணிக வெற்றிக் கதையாக மாறியுள்ளது.இந்த பிராண்டின் விற்பனையிலிருந்து கிடைக்கும் ராயல்டி வருமானம் மூலம், ஜோர்டான் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை சம்பாதித்து வருகிறார். நைக்கின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பிராண்ட், விளையாட்டு உலகைத் தாண்டி வணிக உலகிலும் அவரது செல்வாக்கை நிரூபித்துள்ளது.ஒரு வீரராக சாதனைகள் படைத்ததோடு, தனது பெயரின் மதிப்பை உலகளாவிய வர்த்தக சக்தியாக மாற்றிய மைக்கேல் ஜோர்டான், விளையாட்டும் வணிகமும் ஒன்றாக வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
எகிப்து 3-1 நியூசிலாந்து: வான்கூவரில் நடந்த 'ஜி' பிரிவு போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, உலக கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது எகிப்து. 4 புள்ளிகளுடன் பிரிவில் முதலிடத்திலும் உள்ளது.கேப் வெர்டே 2-2 உருகுவே: மியாமியில் நடந்த 'எச்' பிரிவு லீக் போட்டியில் இரு அணிகளும் சமபலத்துடன் போராடியதால் ஆட்டம் 2-2 என 'டிரா'வில் முடிந்தது.பெல்ஜியம் 1-1 இரான்: லாஸ் ஏஞ்சல்சில் நடந்த 'ஜி' பிரிவு போட்டியில், பெல்ஜியம் அணி 70% பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தும் ஆட்டம் 1-1 என 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
சீனாவில் நடைபெறும் ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் தொடரின் ஆண் வால்ட் பிரிவில் இந்திய வீரர் ஹர்சித் தாமோதரன் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். அக்சய் பஜாஜ் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். மேலும், ஹர்சித், அக்சய் உள்ளிட்ட இந்திய அணி வெண்கலப் பதக்கமும் வென்றது.
ஜெர்மனியில் நடைபெறும் உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், 16 வயதான இந்திய வீரர் பிரிதம் கேந்த்ரே ஆண்களுக்கான 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். பெண்களுக்கான 25 மீ. பிஸ்டல் அணி பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றியது. இதுவரை இந்தியா 5 தங்கம், 1 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
ரீ-என்ட்ரி: லண்டனில் நடக்கவுள்ள விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் (44) 'வைல்டு கார்டு' முறையில் ஒற்றையர் பிரிவிலும், தன் அக்கா வீனஸுடன் (46) இணைந்து இரட்டையர் பிரிவிலும் பங்கேற்கிறார்.சாதனைகள்: விம்பிள்டனில் செரினா ஒற்றையரில் 7 பட்டங்களும், இரட்டையரில் 6 பட்டங்களும் வென்றுள்ளார். 2012 ஒலிம்பிக்கிலும் இதே களத்தில் இரு பிரிவுகளிலும் தங்கம் வென்றார்.சவால்: நீண்ட இடைவெளிக்குப் பின் விளையாடுவதால் 'ரேங்கிங்' இல்லாத செரினா, முதல் சுற்றிலேயே ஸ்வியாடெக் அல்லது சபலென்கா போன்ற முன்னணி வீராங்கனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.செரினாவின் இந்த 'ரீ-என்ட்ரியை' பெண்கள் டென்னிஸ் கூட்டமைப்பு (WTA) வரவேற்றுள்ளது.
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், பெண்களுக்கான நேஷன்ஸ் கோப்பை ஹாக்கியின் 4-வது சீசன் நடைபெற்றது. நேற்று நடந்த விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.இதில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.வரலாற்று வெற்றி: இதற்கு முன், கடந்த 2022-ல் நடந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.புரோ லீக் தகுதி: இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், இந்திய பெண்கள் அணி புரோ லீக் தொடரில் (2026-27) விளையாட அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது.கோப்பை வென்று சாதனை படைத்த இந்திய அணியினருக்கு, ஹாக்கி இந்தியா சார்பில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது:வீராங்கனைகளுக்கு: தலா ₹3 லட்சம்பயிற்சியாளர் குழுவினருக்கு: தலா ₹1.5 லட்சம்
இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ,இறுதிப்போட்டியில் இந்தியா 'ஏ' அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.தம்புலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற பைனலில், இந்தியா 'ஏ' மற்றும் இலங்கை 'ஏ' அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை 'ஏ' அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த இந்தியா 'ஏ' அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்தது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 11 பந்துகளில் அரைசதம் விளாசி உலக சாதனை படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.378 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை 'ஏ' அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 47.1 ஓவர்களில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதன்மூலம் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 'ஏ' அணி, முத்தரப்பு தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
ஜெர்மனி 2-1 ஐவரிகோஸ்ட்டொராண்டோவில் நடந்த 'இ' பிரிவு லீக் ஆட்டத்தில் ஜெர்மனி அணி, ஐவரிகோஸ்டை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. கடைசி நிமிடத்தில் உன்டாவ் அடித்த கோல் ஜெர்மனிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தது. இதன் மூலம் ஜெர்மனி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பதிவு செய்தது.ஜப்பான் 4-0 துனிசியாமெக்சிகோவின் மாண்டெரேவில் நடந்த 'எப்' பிரிவு ஆட்டத்தில் ஜப்பான் அணி, துனிசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் எளிதாக தோற்கடித்தது. இந்த உலகக் கோப்பை வரலாற்றில் ஜப்பானின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.நெதர்லாந்து 5-1 சுவீடன்ஹூஸ்டனில் நடைபெற்ற 'எப்' பிரிவு ஆட்டத்தில் நெதர்லாந்து அணி, சுவீடனை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. காக்போ 2 கோல்கள் அடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.