ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனைகள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஹிமான்சி (574), சேஜல் (573), வன்ஷிகா (572) ஆகியோர் முறையே 3, 4, 5-வது இடங்களைப் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.இறுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட 18 வயதான சேஜல், 240.2 புள்ளிகள் குவித்து முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். மேலும், பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின் பிராச்சி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.இந்தப் போட்டித் தொடரில் இதுவரை இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 6 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. தலா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்துடன் ரஷ்யா இரண்டாவது இடத்திலும், ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் சுவிட்சர்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மும்பையில் நடைபெற்ற குளோபல் செஸ் தொடரின் 9வது சீசனில் இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன் பட்டத்தை வென்றார். 16 நாடுகளைச் சேர்ந்த 56 வீரர்கள் பங்கேற்ற இந்த தொடரில், 13 கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் 33 சர்வதேச மாஸ்டர்கள் களமிறங்கினர்.உலகின் முன்னணி வீரர்களான பெலாரஸின் அலெக்சி பெடெரோவ் மற்றும் ரஷ்யாவின் போரிஸ் செவ்சென்கோ ஆகியோரை வீழ்த்திய இனியன், 9 சுற்றுகள் முடிவில் 7.5 புள்ளிகள் (6 வெற்றி, 3 டிரா) பெற்று முதலிடம் பிடித்தார். ரஷ்யாவின் போரிஸ் செவ்சென்கோ இரண்டாவது இடத்தையும், இந்தியாவின் அஜய் சந்தோஷ் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.கனடா - கத்தார்:வான்கூவரில் நடைபெற்ற ‘பி’ பிரிவு ஆட்டத்தில் கனடா அணி, கத்தாரை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. கனடா அணிக்காக சைல் லாரின் மற்றும் ஜோனாதன் டேவிட் உள்ளிட்டோர் கோல்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.சுவிட்சர்லாந்து - போஸ்னியா:லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ‘பி’ பிரிவு போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் போஸ்னியாவை எளிதாக தோற்கடித்தது. ஜோஹன் மன்ஜாம்பி இரண்டு கோல்களும், ரூபன் வர்காஸ் ஒரு கோலும் அடித்தனர். இதன் மூலம் சுவிட்சர்லாந்து தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.மெக்சிகோ - தென் கொரியா:குவாடலஜாராவில் நடைபெற்ற ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வென்றது. லூயிஸ் ரோமோ அடித்த கோலே ஆட்டத்தின் வெற்றிக் கோலாக அமைந்தது. சொந்த மண்ணில் மெக்சிகோ சிட்டியைத் தவிர மற்ற நகரங்களில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் மெக்சிகோ பெற்ற முதல் வெற்றியாக இது பதிவானது.
ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இரு பதக்கங்களை வென்று, சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, முதுகுப்பகுதி காயத்திலிருந்து முழுமையாக மீண்டுள்ளார். இன்று நடக்கும் கத்தார் டைமண்ட் லீக் தொடரில் அவர் களமிறங்குகிறார். கடந்த ஆண்டு இதே தொடரில் இவர் 90.23 மீ. தூரம் எறிந்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் நடைபெறும் மக்காவ் ஓபன் பாட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் அஷ்மிதா அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் மலேசிய வீராங்கனை காயத்தால் பாதியில் விலகியதால், இந்தியாவின் அன்மோல் கார்ப் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
நியூசிலாந்தில் நடக்கும் நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய பெண்கள் அணி உருகுவேயை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி, தற்போது கம்பீரமாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஜெர்மனிக்கு எதிரான புரோ லீக் ஹாக்கி போட்டியில் (இந்தியா 3-1 என வெற்றி) களமிறங்கியதன் மூலம், இந்திய வீரர் மன்பிரீத் சிங் தனது 413-வது சர்வதேச போட்டியில் விளையாடி புதிய சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்காக அதிக போட்டிகளில் விளையாடிய திலிப் டிர்கேவின் (412 போட்டிகள்) சாதனையை முறியடித்து அவர் முதலிடம் பிடித்தார். இந்த சாதனைக்காக அவருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
2026 உலகக்கோப்பையில் அல்ஜீரியாவுக்கு எதிராக விளையாடிய Lionel Messi, தனது 200வது சர்வதேச போட்டியை நிறைவு செய்து இந்த மைல்கல்லை எட்டிய உலகின் 3வது வீரராக சாதனை படைத்தார்.17வது நிமிடத்தில் கோல் அடித்த அவர், 6 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடிய முதல் வீரர் மற்றும் 5 உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த 2வது வீரர் என்ற சாதனைகளையும் பதிவு செய்தார். மேலும் தனது முதல் உலகக்கோப்பை ஹாட்ரிக் கோலை அடித்து, 16 உலகக்கோப்பை கோல்களுடன் Miroslav Klose-யின் சாதனையை சமன் செய்தார்.இந்தப் போட்டியில் Argentina national football team 3-0 என்ற கோல் கணக்கில் Algeria national football team அணியை வீழ்த்தியது.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நேற்றுஅரங்கேறிய 'ஐ' பிரிவு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பிரான்ஸ், ஆப்பிரிக்க நாடான செனகலை சந்தித்தது.உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படும் ,பிரான்சுக்கு, தொடக்கத்தில் செனகல் கடும் சவால் அளித்தது. முடிவில் பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக் கில் செனகலை தோற்கடித்து வெற்றியோடு தொடங்கியது.
இந்திய பெண்கள் அணி டி-20 உலக கோப்பை லீக் போட்டியில் 95 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.பெண்களுக்கான .'டி-20' உலக கோப்பை 10வது சீசன் இங்கிலாந்து, வேல்சில், நடக்கிறது.லீட்சில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் நேற்று, இந்தியா, நெதர்லாந்து - அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெதர்லாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது இந்திய அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்ததுநெதர்லாந்து அணி 17.3 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.