25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Jun 17, 2026

2026 உலகக் கோப்பை கால்பந்து: விறுவிறுப்பான லீக் போட்டிகள் 'டிரா'வில் முடிவு!

அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடந்து வரும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று முடிவுகள்:உருகுவே - சவுதி அரேபியா (1-1): மயாமி நகரில் நடந்த 'எச்' பிரிவு போட்டியில், சவுதி அரேபியாவின் அல்அம்ரி 41-வது நிமிடத்தில் கோல் அடித்தார். உருகுவே அணி பதிலடி கொடுக்க, ஆட்டம் 1-1 என 'டிரா' ஆனது.பெல்ஜியம் - எகிப்து (1-1): சியாட்டில் நகரில் நடந்த 'ஜி' பிரிவு போட்டியில், எகிப்தின் எமாம் அஷூர் 19-வது நிமிடத்தில் கோல் அடித்தார். 66-வது நிமிடத்தில் எகிப்து வீரர் முகமது ஹனி 'சேம்சைடு' கோல் அடிக்க, இப்போட்டியும் 1-1 என சமனில் முடிந்தது.ஈரான் - நியூசிலாந்து (2-2): லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த மற்றொரு 'ஜி' பிரிவு ஆட்டத்தில், நியூசிலாந்தின் ஹென்றி ஜஸ்ட் 2 கோல்களும், ஈரானின் ராமின் மற்றும் முகமது தலா ஒரு கோலும் அடித்தனர். இறுதியில் போட்டி 2-2 என 'டிரா' ஆனது.

Jun 17, 2026

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி!

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 8 அணிகள் பங்கேற்கும் பெண்களுக்கான நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் (4வது சீசன்) நடந்து வருகிறது. இதில் கோப்பை வெல்லும் அணி 2026-27 புரோ லீக் தொடருக்குத் தகுதி பெறும்.'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தியதைத் தொடர்ந்து, நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் 2-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.தொடர்ச்சியாக 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று, தனது பிரிவில் 'டாப்-2' இடத்தை உறுதி செய்த இந்தியா, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நாளை உருகுவேயை எதிர்கொள்கிறது.

Jun 17, 2026

ஸ்மிருதி மந்தனாவுக்கு கவுரவம்.

அமெரிக்காவில் இருந்து வெளியாகிறது டைம் இதழ். இதன்  சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அரசியல், அறிவியல், கலை உட்பட  பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் உலகின் 'டாப் -100' நபர்கள் பட்டியல் வெளியிடப்படும்.இந்த வரிசையில்  விளையாட்டு பிரிவில் நட்சத்திரங்கள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 29, இடம் பெற்றுள்ளார்.இப்பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய விளையாட்டு நட்சத்திரம் ஆனார். உள்ளூர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், டெஸ்ட், ஒருநாள், 'டி-20' என மூன்று வித கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை, பெண்கள் கிரிக்கெட்டில் அதிக சதம் (17) அடித்தவர், சர்வதேச அரங்கில் ஒரே ஆண்டில் 1000 ரன்னுக்கும் மேல் குவித்த முதல் வீராங்கனை என சாதித்துள்ளார். 

Jun 17, 2026

விம்பிள்டன் டென்னிஸ்: 4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணையும் வில்லியம்ஸ் சகோதரிகள்!

லண்டனில் ஜூன் 29 முதல் ஜூலை 12 வரை நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், அமெரிக்காவின் நட்சத்திர சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ் (46) மற்றும் செரினா வில்லியம்ஸ் (44) ஜோடி பெண்கள் இரட்டையர் பிரிவில் களம் இறங்குகிறது. இதற்காக இவர்களுக்கு சிறப்பு அனுமதி (Wild Card) வழங்கப்பட்டுள்ளது.சாதனை ஜோடி: ஒற்றையர் பிரிவில் செரினா 23 பட்டங்களையும், வீனஸ் 7 பட்டங்களையும் வென்றுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து இரட்டையர் பிரிவில் இதுவரை 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அள்ளியுள்ளனர்.மீண்டும் கம்பேக்: கடைசியாக 2022 யு.எஸ். ஓபனில் விளையாடிய இந்த ஜோடி, தற்போது நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விம்பிள்டன் இரட்டையர் களத்தில் ஒன்றாக இணையப் போகிறது.ஓய்வு முடிவை மாற்றிக்கொண்ட செரினா வில்லியம்ஸ், கடந்த வாரம் நடந்த குயின்ஸ் கிளப் தொடரின் மூலம் டென்னிஸ் களத்திற்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Jun 16, 2026

ஒருநாள் கிரிக்கெட் தொடர்,

இந்தியா, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் 'ஏ' அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர், இலங்கையின் தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.நேற்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா 'ஏ' மற்றும் இலங்கை 'ஏ' அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 'ஏ' அணி 49.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.பின்னர் களமிறங்கிய இலங்கை 'ஏ' அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி சமநிலையில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 'ஏ' அணி விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து ஆடிய இந்தியா 'ஏ' அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்ததால், இலங்கை 'ஏ' அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.சூப்பர் ஓவர் வெற்றிக்குப் பிறகு இலங்கை வீரர்கள் உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடினர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை 'ஏ' அணி தொடரில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

Jun 16, 2026

2026 உலகக் கோப்பை கால்பந்து.

அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெற்று வரும் 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.ஜப்பான் - நெதர்லாந்து:'எப்' பிரிவு ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் நெதர்லாந்து அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தன.ஸ்வீடன் - துனிசியா:'எப்' பிரிவு போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ஸ்வீடன் அணி, துனிசியாவை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கியது.ஸ்பெயின் - கேப்வெர்டே:'எச்' பிரிவு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் மற்றும் அறிமுக அணியான கேப்வெர்டே 0-0 என்ற கோல் கணக்கில் டிரா செய்தன. பலம் வாய்ந்த ஸ்பெயினை சமாளித்து ஒரு புள்ளி பெற்ற கேப்வெர்டே அணியின் கோல் கீப்பர் வோசின்யா சிறப்பாக செயல்பட்டார்.

Jun 15, 2026

ஜஸ்பால் ராணா காலமானார்; துப்பாக்கி சுடுதல் உலகில் சோகம்.

இந்திய முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரரும் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா (49) திடீர் மாரடைப்பால் காலமானார். ஆசிய விளையாட்டில் 4 தங்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்ற அவர், ஓய்வுக்குப் பிறகு பயிற்சியாளராக செயல்பட்டார். அவரது பயிற்சியில் பாரிஸ் ஒலிம்பிக்கில் மனு பாகர் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்றார். சமீபத்தில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தூக்கத்தில் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Jun 15, 2026

5000 மீ. ஓட்டத்தில் பருல் சவுத்ரி வெள்ளிப் பதக்கம்.

பிரான்சின் நைஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில், பெண்களுக்கான 5000 மீ. ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி 15 நிமிடம் 04.26 வினாடிகளில் இலக்கை எட்டி 2வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம், 2023ல் அவர் படைத்திருந்த தேசிய சாதனையை முறியடித்தார். மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதி நேரத்தையும் எளிதில் கடந்தார்.

Jun 15, 2026

பிரேசில் - மொராக்கோ ஆட்டம் டிரா.

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'சி' பிரிவு லீக் போட்டியில், பிரேசில் மற்றும் மொராக்கோ அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தன. கடைசி வரை இரு அணிகளும் போராடியபோதும் வெற்றி கோல் எதுவும் பதிவாகவில்லை. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

Jun 15, 2026

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்.

கத்தார் - சுவிட்சர்லாந்து (1-1 டிரா): சான் பிரான்சிஸ்கோவில் நடந்த 'பி' பிரிவு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன. இது கத்தார் உலகக் கோப்பையில் பெற்ற முதல் புள்ளியாகும்.ஸ்காட்லாந்து - ஹைதி (1-0): பாஸ்டனில் நடந்த 'சி' பிரிவு போட்டியில் ஜான் மெக்கின் அடித்த கோலால் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றது. இது 1990-க்குப் பின் உலகக் கோப்பையில் அந்த அணி பெற்ற முதல் வெற்றியாகும்.ஆஸ்திரேலியா - துருக்கி (2-0): வான்கூவரில் நடந்த 'டி' பிரிவு போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரைத் துவக்கியது. துருக்கி அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

1 2 ... 19 20 21 22 23 24 25 ... 170 171

AD's



More News