மாயா ராஜேஸ்வரன் ரேவதி, செர்பியாவின் அனஸ்டா சியா சிவெட்கோவிச் ஜோடி, சாம்பியன்.
பெண்களுக்கான போர்ட் லாடர் டேல் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில், (18 வயதுக்கு உட்பட்டோர்) ,இரட்டையர் பிரிவு பைனலில், 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் 16 வயது மாயா ரேவதி, செர்பியாவின் அனஸ்டா சியா சிவெட்கோவிச் ஜோடி, 'நம்பர்-5' அந்தஸ்து கொண்ட அமெரிக்காவின் தியா புரோடின், வெல்லஸ் நியூமன் ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை 3-6 ,2வது செட்டை 6-2 என கைப்பற்றியது. வெற்றியாளரை முடிவு செய்ய சூப்பர் டை பிரேக்கர்' நடந்தது.. முடிவில் மாயா ஜோடி 3-6, 6-2, 10-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை வென்றார்.
அமெரிக்காவின் அனிதா டுவிடம் ,ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற மாயா, முதல் சுற்றில் 0-6, 3-6 என தோல்வியடைந்தார்.
சர்வதேச ஜூனியர் டென்னிஸ் தரவரிசையில் மாயா இரட்டையரில் கோப்பை வென்றதை அடுத்து, 38வது இடத்துக்கு முன்னேறினார்.
15 வயதான தமிழக டென்னிஸ் வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி தற்போது சர்வதேச அளவிலான போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். டெல்லியில் நடைபெற்று வரும் ஐடிஎப் ஜே 300 டென்னிஸ் போட்டியில் மாயா தற்போது வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை வென்றார்.களத்தில் ஆக்ரோஷமாக ஷாட்களை விளையாடி எதிரணி வீராங்கனைகளை மாயா அபாரமாக வீழ்த்தி வருகிறார். கோவையில் பிறந்து வளர்ந்து தற்போது ஸ்பெயினில் உள்ள ரஃபேல் நடால், டென்னிஸ் அகாடமிவில் மாயா பயிற்சி செய்து வருகிறார்.
0
Leave a Reply