25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


14 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற,அமெரிக்காவின் ஜான் சீனா டபிள்யு.டபிள்யு.இ., மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

14 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற,அமெரிக்காவின் ஜான் சீனா டபிள்யு.டபிள்யு.இ., மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அமெரிக்காவை சேர்ந்த டபிள்யு. டபிள்யு.இ., மல்யுத்த வீரர் ஜான் சீனா 48. நடிகரான இவர், 1998ல் கலிபோர்னியாவில் மல்யுத்த பயிற்சி மேற்கொண்டார். பின், 1999ல் தொழில்முறையிலான மல்யுத்த போட்டியில் அறிமுகமானார். கடந்த 2002ல் முதன்முறையாக டபிள்யு.டபிள்யு.இ., போட்டியில் களமிறங்கிய ஜான் சீனா, 14 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். டபிள்யு. டபிள்யு.இ., ஜாம்பவான்களான அண்டர்டேக்கர், ராக், டிரிபிள் எச் உள்ளிட்டோருடன் மோதி யுள்ளார்.

வாஷிங்டனில் நடந்த தனது கடைசி போட்டியில் பங்கேற்ற ஜான் சீனா, ஆஸ்திரியாவின் குந்தரை சந்தித்தார். 'டேப் அவுட்' முறையில் தோல்வியை தழுவினார்.இதனையடுத்து தனது 25 ஆண்டுகளுக்கு மேலான மல்யுத்த பயணத்தை தோல்வியுடன் நிறைவு செய்தார். போட்டி முடிந்த பின், தனக்கு ஆதரவு வழங்கிய ரசிகர்களுக்கும், சக வீரர்களுக்கும் நன்றி தெரிவித்தார். ரசிகர்கள் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News